English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cowslip
n. மணமுள்ள மஞ்சள் மலர்உடைய காட்டுச் செடிவகை.
Cowslipd
a. காட்டுச் செடிவகையின் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட.
Cow-tree
n. பால்மரம், பால்போன்ற சாறுள்ள தென் அமெரிக்க முசுக்கட்டையின் மரம்.
Cow-wheat
n. கோதுமை தானியங்களைப் போன்ற விதைகளுள்ள மஞ்சள் மலர்ச் செடிவகை.
Coxa
n. இடுப்பு, வளைய உடலிகளின் காலில் முதல் எலும்பு இணைப்பு.
Coxalgia
n. இடுப்புவலி, இடுப்பு நோய்.
Coxcomb
n. கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு, கோமாளி, முட்டாள், பகடி, பசப்பன்.
Coxcombic, coxcombical
a. பகட்டான, தற்பெருமையுடைய, தருக்குடைய.
Coxcombry
n. கோமாளித்தனம், பகட்டுத்தனம்.
Coxswain
n. படகோட்டி, படகையும் படகின் ஆட்களையும் பொறுப்பாகக் கொண்டுள்ள சிறு அதிகாரி, (வி.) படகோட்டியாகச் செயலாற்று.
Coxy
a. இறுமாப்புடைய, தன் முனைப்புமிக்க.
Coy
a. நாணமுடைய, கூச்சமுள்ள, இடவகையில் ஒதுக்கமான, பேச்சு வகையில் ஒதுங்குகிற, தன்னடக்கமான.
Coyote
n. சிறு வடஅமெரிக்க ஓநாய் வகை.
Coypu
n. நீரில் வாழும் தென்னமெரிக்கக் கொறிக்கும் விலங்கு வகை.
Coze
n. வம்பளப்பு, (வி.) அளவளாவி உரையாடு.
Cozen
v. ஏமாற்று, வஞ்சித்துப் பறி, மயக்கிச் சிக்கவை, வஞ்சமாக நட.
Cozenage
n. ஏமாற்று, வஞ்சகச்செயல்.
Crab
-1 n. நண்டு, கடக இராசி, ஆடிவான்மனை, பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம், (வி.) பக்கவாட்டில் நட, விலாப்புறமாக ஓடு, நண்டுபிடி.
Crab
-2 n. சோர்வு, வாட்டம், குற்றங்காணல், குற்றங்காணும் தன்மை, (வி.) பருந்து முதலிய வற்றின் வகையில் கூர் நகத்தால் கீறு, பிறாண்டு, கீறிக்கிழித்துப் போராடு, தடு, அழி, தடுத்தழி.
Crab
-3 n. கசப்பான காட்டு ஆப்பிள் பழவகை, சிடுசிடுப்பானவர், 'சுடுமூஞ்சி'.