English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cow-grass
n. ஆண்டு முழுவதும் தழைக்கும் செந்நிற மணப்புல் வகை.
Cowhage
n. வெப்பமண்டல அவரைவகைக்கொடி, புழுக்களை வெருட்டப் பயன்படும் அவரைவகைக் கொடி விதையின் கொடுக்கு முள் மயிர், அவரை வகைக் கொடியின் விதைகள்.
Cow-heel
n. பாகுபோல் புழுக்கிப் பக்குவம் செய்யப்பட்ட எருதின் கால்.
Cowhide
n. பசுவின் தோல், பதனிடப்பட்ட பசுத்தோல், பசுத்தோலின் முறுக்குவார்களால் செய்யப்பட்ட சொரசொரப்பான கசை, (வி.) பசுத்தோல் வாரின் சவுக்கினால் அடி.
Cowhouse
n. பசுத்தொழுவம்.
Cowish
a. பசுமாடு போன்ற, கோழையான.
Cowl
-1 n. தொப்பி, தலைமூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கு, மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி, மடத்துத் துறவிக்குரிய சின்னம், மடத்துறவிநிலை, மடத்துறவி, புகைபோக்கி மூடி, இயந்திர மூடாக்கு, விமான இயந்திரக்கவிகை மூடி, (வி.) மூடாக்காக மூடு, மடத்துத் துறவியாக்
Cowl
-2 n. தண்ணீர்த்தொட்டி, இருவர் தூக்க இருபுறப்பிடிகளுள்ள மிடா.
Cow-leech
n. மாட்டு மருத்துவர்.
Cowlick
n. நெற்றிச் சுழிமயிர்க்குஞ்சம்.
Cowling
n. வானுர்தி இயந்திரத்தின் மேல்மூடி.
Cow-parsnip
n. பசுத்தீவனச் செடிவகை.
Cow-pea
n. மொச்சை இனச் செடிவகை.
Cow-pilot
n. மேற்கு இந்தியத் தீவுகளின் மீன் வகை.
Cow-plant
n. இலங்கையிலுள்ள பால் போன்ற சாறுள்ள செடி வகை.
Cow-pox
n. கோவாசூரி, பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய் வகை.
Cow-puncher
n. பசுமேய்க்கும் சிறுவன், மாட்டிடையன்.
Cowrie, cowry
சோழி, பண்டமாற்று நாணயமாக வழங்கும் சிப்பி, சிப்பி மீன் வகை.
Cowshed
n. பசுத்தொழுவம், மாட்டுக்கொட்டில்.