English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dazzle
n. மினுமினுப்பு, பகட்டு, பளபளப்பு, கண்கூசப் பண்ணும் பொருள், (வினை) ஔதமிகுதியால் கண்கூசச்செய், மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு, அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய், பெருமையால் திகைக்கவை, அளவினால் பொறி கலங்கவை.
Dazzle paint
கப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு.
Dazzlement
n. மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல், திகைப்பூட்டல்.
Dazzle-painting
n. மாறாட்ட வண்ணப்பூச்சு, உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
Dcor
n. திரை அரங்கொப்பனை, அரங்க அமைப்பு, செயற்கை அறை அமைப்பு, திரை ஓவிய அமைதி.
D-Day
n. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள், முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
De facto
a. மெய்யான, சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான, (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
De haut en bas
adv. அருளிப்பாட்டுணர்ச்சியுடன், அனுக்கிரகிப்பதுபோல.
De mortuis nil nisI bonum,
இறந்தவர்களைப் பற்றி நல்லதைத்தவிர வேறொன்றும் பேசக்கூடாது.
De nouveau, denovo
புதிதாக. மறுபடியும தொடக்கத்திலிருந்து, மீண்டும் அடியிலிருந்து தொடங்கி.
De o volente
adv. இறைவன் விரும்பினால், வேறு ஏதும் தடுக்காதிருந்தால்.
De profundis
n. துயரற்ற நெஞ்சின் உள்ளாழத்திலிருந்து வரும் குரல், (வினையடை) ஆழத்திலிருந்து.
De regle
a. விதிக்கேற்ற, தகுதியான, வழக்கமான.
De rigueur
a. ஆசார முறைக்குகந்தபடியான.
De trop
a. வேண்டப்படாத, தேவையற்ற.
Deacon
n. உதவிக்குரு, திருக்கோயில் மணியக்காரர், ஸ்காத்லாந்து நாட்டில் வரைநிலைக்குழும முதல்வர்,
Dead
n. மாண்டவர், இறந்துபோனவர், முழு அமைதிநேரம், (பெயரடை) மாண்ட, உயிர்வாழ்வு முடிந்துபோன, உயிரற்ற, பட்டுப்போன, சாவுநிலை ஒத்த, உயிர்ப்பற்ற, செயலற்ற, புல் பூண்டு வளர்ச்சிய்றற, மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த, கவனத்தில் கொள்ளாத, ஏற்காத, கடிதவகையில் ஏற்கப் பெறாத, தாப்புற்ற, கிளர்ச்சியற்ற, சோர்வுமிக்க, குஜ்ல் வகையில் அடங்கிய, ஆற்றலற்றுப்போன, வளைவு நௌதவற்ற, மீளாத, வழக்கற்றுப் போன, வழங்காத, மரபற்றுப்போன, முழுநிறைவான.மிகுதியான, மிக மோசமான, திடீரென்ற, பிழைபடாத, துல்லியன்ன, தவறாத, பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற, குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற, (வினை) மழுங்கச் செய், ஆற்றலிழக்கச் செய், மரத்துரபபோகச்செய், ஆற்லிழ, மரத்துப்போ, (வினையடை) முழுதும், முற்றிலும், தீர, நன்றாக, மாறுபாட்டுக்கு இடமின்றி, இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல், இறந்து போனமாதிரியாக.
Dead against
முற்றும் மாறாக,
Dead arch
போலி வளைவு, வளைவு போன்ற தோற்றமுடைய மதிலமைவு,
Dead as a. door nailr dead as a herring
முற்றிலும் இறந்துபோன.