English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Defer(2)
v. கீழ்ப்படி, விட்டுக் கொடு, இணங்கிப்போ.
Deference
n. பணிவிணக்கம், மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு, மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு, பண்பிணக்கம், விட்டுக் கொடுத்தல்.
Deferent
n. உடலில் வௌதநோக்கிச் செல்லும் குருதி நாளம், (பெயரடை) கொண்டு செல்கிற, புறநோக்கிச் செலகிற, பணிவிணக்கமுடைய, இணக்க வணக்கம் காட்டுகிற.
Deferential
a. பணிவிணக்கம் காட்டுகிற.
Deferment
n. தள்ளிப்போடுதல்.
Deferrer
n. காலந்தாழ்த்துபவர், காலங்கடத்துபவர், ஒத்திப்போடுபவர்,
Defervescence, defervescency
n. வெப்பத் தணிவு, குளிர்ச்சி, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.
Defeudalize
v. நிலமானியத்திற்குரிய பண்பிலிருந்து விலக்கு.
Defiance
n. எதிர்ப்பு, அறைகூவல், எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு, வலிந்து தாக்குதல், மீச்செலவு, பகை புறக்கணிப்பு, பணிய மறுத்தல், மீறுகை.
Defiant
a. எதிர்க்கிற, ஏற்க மறுக்கிற, ஐயப்படுகிற.
Deficience, deficiency
n. குறைபாடு, குறைவு.
Deficient
n. குறைபாடுற்றவர், உடல் திறக் கூறுகளிலோ உளத்திறக் கூறுகளிலோ குறைபடடவர்.
Deficit
n. பற்றாக்குறை, செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
Defide
a. சமயப் பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டிய.
Defied
v. டெபை என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Defilade
n. வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை, (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
Defile
-2 v. ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய், இடுங்கிய அணிவரிசையில் செல்.
Defile
-3 v. கெடு, கறைப்படுத்து, தூய்மை கெடு, கற்பழி, தெய்விகத் தன்மையை இழிவுசெய், மேன்மை குலை, ஆசாரம் கெடு.
Defile(1)
n. மட்டும் செல்லத்தக்க இடுங்கிய இடைவழி, கணவாய், கெவி.