English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Degrade
v. தரங்குறை, கீழ்ப்படிக்குக் கொண்டுபோ, இழிவுபடுத்து, பணித்துறைகளில் தண்டனையாகப் படி இறக்கு, அடுக்குத் திறங்களில் அடுக்கு விசை குறை.
Degraded
a. படி இறக்கம் பெற்ற, தரங்குறைந்த, இழிந்த. கீழான, பண்பிழந்த, (கட்) படிகளில் அமைந்த.
Degrading
a. இழிவுபடுத்துகிற, தாழ்வு தருகிற, மதிப்புக்கேடான.
Degree
n. படி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்,
Degression
n. கீழ்நோக்கிய போக்கு, இறக்கம், குறிப்பிட்ட வரம்புக்குக் கீழுள்ள தொகைகள் மீது வரிக் குறைப்பு வீழ்ம்.
Dehisce
v. (தாவ) கூம்பவிழ், வாயைப்பிள.
Dehort
v. எதிராகத் தூண்டிவிடு.
Dehortative
a. எதிராக வற்புறுத்துகிற.
Dehumanize
v. மனிதத் தன்மையைப் போக்கு, மனிதனின் சிறப்பியல்புகளை இழக்கும் படி செய்.
Dehydrate
v. (வேதி) நீரை அகற்று, நீர்க்கூறகற்று.
Dehypnotize
v. வசியமயக்கநிலையிலிருந்து விடுவி, ஏவு துயிலிலிருந்து எழுப்பு.
De-ice
v. வானுர்திமீது பனிக்கட்டி உறைவதைத் தடுக்கும் ஏற்பாடு செய்.
De-Icer
n. பனிககட்டி உறைவதைத் தடுக்கும் கருவி, பனிக்கட்டி உறையைத் தவிர்க்கும் மின் அமைவு, பனிக்கட்டிகள் விமானச்சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் கூட்டுக்கலவை.
Deicide
n. தேவ வதை, தேவக் கொலைஞன்.
Deictic
a. (மொழி, இலக்) சுட்டிக்காட்டுகின்ற, சுட்டியஷ்ன.
Deific, deifical
தெய்வத்தன்மையுள்ள, தெய்வத்தன்மையளிக்கிற.
Deification
n. தெய்வமாக்கும் செயல், தெய்மாக்கப்பட்ட திருவுரு.
Deiform
a. தெய்வ உருவுடைய, தெய்வ இயல்புடைய.
Deify
v. தெய்வமாக்கு, கடவுள் மங்கலஞ் செய்.
Deign
v. தகுதி ஏற்றருள், அருளிச்செய், அருளியுரை.