English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Descendable, descendible
a. மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க, கால்வழியுரிமையாக வரக்கூடிய, இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
Descendable, descendible
a. வழிவந்த, மரபில் வந்த, வழித்தோன்றிய.
Descendant
n. மரபினர் வழித்தோன்றல்,
Descendent
a. கீழிறங்குகிற, கீழ்நோக்கிச் செல்கிற, வழித்தோன்றிய.
Descent
n. இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை.
Describe
v. விரித்துரை, விளக்கியுரை, முழு விவரம் கூறு, பண்புகளை எடுத்துரை, சொற்களால் வருணி, பண்பேற்றியுரை, குறித்துரை, வரைந்து காட்டு, வரைவடிவம கொடு.
Description
n. விரித்துரைத்தல், குறித்துரைத்தல், விரிவுரை, வருணனை, விளக்கவுரை, குறித்துரை, சாட்டுரை, வரைந்துகாட்டுதல், வரைவடிவளிப்பு, சொல்விளக்கம், பண்புரு, வகை, மாதிரி, இனம்.
Descriptive
a. விளக்கமான, விரிவான, விளக்கத்தக்க, விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த, வருணனை ஆர்வமுடைய.
Descry
n. கண்டுபிடிப்பு, (வினை) நோக்கியறி, கண்டுணர், தொலைவிலுள்ளதைப் பார்த்தறி.
Desecrate
v. தூய்மை கெடு, தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து, தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்,
Desecration
v. தெய்விகத் தன்மையைக் கெடுத்தல், தூய்மை கெடுத்தல், தூய்மைக்கேடு, பழிகேடு.
Desensitize
v. கூர் உணர்ச்சியைக் கறை, நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.
Desentail
n. (சட்) மரபுரிமைக் கட்டுப்பாட்டினின்றும் விடுவி, உடைமையின் மீதுள்ள மரபுரிமைக் கட்டுப்பாட்டினை முறி.
Desert
-1 n. பாலைவனம், நீரில்லாப் பாழ்நிலம், மரங்களற்ற பொட்டற்காடு, மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம், கவர்ச்சியற்ற, பரப்பு, உவர்ப்பூட்டும் செய்தி, சுவைத்திறமற்ற ஊழி, (பெயரடை) மக்கள் வாழாத, மனித நடமாட்டமற்ற, பாழான, மரபற்ற புல் பூண்டற்ற, விளைச்சலற்ற, தரிசான,
Desert
-2 n. தகுதிப்பாடு, தகுதிக்கேற்ற தரம், பண்புத் தகுதி, மதிப்புரிமை, ஊதியத்துக்குரிய மெய்யுரிமை.
Desert
-3 v. விட்டுநீங்கு, படைத்துறைச் சேவையிலிருந்து இசைவுபெறாமல் தப்பியோடு, பொறுப்பைத் துறந்துவிடு, பொருளைக் கைவிடு, கொள்கை துற, கட்சி துற.
Deserter
n. கைவிடுபவர், பொறுப்பை விட்டாடுபவர், படைத்துறை விட்டோ டுபவர், கொள்கை துறப்பவர், கட்சி விட்டேகுபவர்.
Desertion
n. கைவிடுதல், கைவிடப்பட்ட நிலை, சட்ட பூர்வமான பொறப்பு விட்டேகுதல், கடமையை மனமறிந்து கைதவற விடுதல்.
Desertless
n. தகுதியற்ற, மதிப்புரிமையற்ற.
Deserve
v. உரிமையுடையவராயிரு, பரிசுக்கு ஏற்றவராயிரு, தகுதியுற்றிரு, இசைவு உடையவராயிரு, இயைபு உடையதாயிரு.