English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Diatessaron
n. விவிலிய நாலின் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிடையே காணத்தகும் ஒத்திசைவு, நான்கு மருத்துவப் பொருட்கள் கொண்ட கலவை.
Diathermancy
n. கதிரியக்க வெப்பத்தின் ஊடுருவும் தன்மை.
Diathermanous, diathermic
a. கதிரியக்க வெப்பம் ஊடுருவிச் செல்லக்கூடிய.
Diathermy
n. உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல், மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.
Diathesis
n. உடற்கூறு சார்ந்த இயல்பான முற்சார்பு, பழக்கவாசனை, பழக்கங் காரணமான முற்படிவு.
Diatom
n. புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை.
Diatomic
n. ஈரணு அடங்கிய, விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய.
Diatonic
a. இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவௌதயையும் கொண்டு இயங்குகிற.
Diatribe
n. தொடர்ச்சியான வாதம், வசைமாகி, பழியுரை.
Diatribist
n. வசைமாரி பொழிபவர், வசை எழுத்தாளர்.
Dib
n. pl. ஆட்டின் கணுவெலும்பு கொண்டு ஆடப்படும் குழந்தை விளையாட்டு வகை, கழங்காட்டம், சீட்டாட்டக் கணிப்புச் சின்னமான வட்டுக்கள்.
Dib
v. தூண்டிலை நீரிலிடு, கொத்து, தோயவிடு.
Dibasic
a. (வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.
Dibber
n. கொத்துக் கருவி.
Dibble
n. கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு.
Dicast
n. பண்டை ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும் கூறுதற்குரிய சான்றுநடுவர் குழுவில் ஒருவர்.
Dicastery
n. பழைய ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும கூறும் சான்றநடுவர் குழு.
Dice
n.pl. பகடை, சூதாட்டம், சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை, (வினை) சூதாடு, பகடை வைத்தாடு, பெட்டிப் பகடையுருவாக்கு, வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
Dice-box
n. நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி.
Dichlamydeous
a. (தாவ) அல்லி வட்டமும் புல்லிவட்டமுமுள்ள.