English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dilated
a. விரிந்த, தட்டையான.
Dilater
n. விளக்கமாகக் கூறுபஹ்ர், விரிவடையச் செய்யும் கருவி, விரிவடையச் செய்யும் தசை.
Dilation
n. விரிவடைதல், அகலுகை, பரத்தல்.
Dilator
v. உறுப்பை விரிவடையச் செய்யும் தசை, விரிவடையச் செய்யும் கருவி.
Dilatory
a. காலங்கடத்துகிற, தாமத்பபடுத்தும் நோக்குடைய, காலநீட்டிக்கம் இயல்புடைய.
Dilemma
n. இருதலை வாதப்பொறி, கவர்ப்பொறி, இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை, இரண்டக நிலை, கஹ்ர்நிலை, வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை.
Dilettante
n. கவின்கலை ஆர்வலர், கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர், மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர்.
Diligence
-1 n. ஆள்வினையுடைமை, தளரா ஊக்கம், சுறுசுறுப்பான உழைப்பு, (சட்) சான்றானை, சான்றாளர்களையும் சான்றுக்குரிய ஏடுகளையும் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்குரிய பற்றாணை, தடைக்கட்டாணை, ஆளையோ பொருளையோ கட்டுப்படுத்திவைக்கும் நடைமுறை.
Diligence(2), diligence
-3 n. பழங்கால ஐரோப்பியத் தலை நிலத்துக்குரிய அஞ்சல் வண்டிவகை.
Dill
n. உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை.
Dilly-dally
v. மனமூசலாடு, தயங்க, மனமின்றி வேலை செய். கடன்கழிப்பாகச் செய்.
Diluent
n. கலவையின் செறிவு தளர்த்துடம் பொருள், குருதியில் நீர்பெருகுவிக்கும் பொருள், (பெயரடை) கலவையின் திட்பம் குறைக்கிற, நீர் கலக்கின்ற.
Dilute(1),a.
நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த, நீர்பெருக்கிய., கலவைவகையிற செறிவு குன்றிய, நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய.
Dilute,(2)
v. நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி, நீர்பெருக்க, கலவையின் திட்பம் தளர்த்து, கலப்படம் செய், நிறவகையில் சாயல் மங்கவை, வண்ண முனைப்புக்குறை, தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.
Dilutee
n. திறமை தேவைப்படும் தொழிலில் வேலையில் புகுத்தப்பட்ட திறமையற்ற தொழிலாளி.
Diluvial, diluvian
வௌளப்பெருக்குச் சார்ந்த, விவிலிய ஏட்டின்படி நோவா கால ஊழிவௌளத்துக்குரிய, உலகப் பேருழிவௌளத்தின் விளைவான, பேருழி வௌளத்தின் செயல்தடமுடைய.
Diluvialist
n. மண்ணியல் நிகழ்ச்சிகளை உழிப் பெரு வௌளத்தின் விளைவாக விளக்குபவர்.
Dim
a. மங்கலான, ஔதகுறைந்த, பார்வை மங்கிய, தௌதவற்ற, (வினை) இருட்டாக்க, தௌதவற்றதாக்கு, புலப்படாது செய், மங்கலாகு.
Dime
n. அமெரிக்க வௌளிநாணயத்தில் பத்தில் ஒரு பகுதி, பத்து அமெரிக்கக் காசு.
Dimension
n. உருவளவை, அளவுக்கூறுகளின் தொகுதி, நீள அகல உயர அளவுத்தொகுதி, உருவளவைக்கூறு, நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று, பருமன், பரும அளவு, பருமானம், நீள அகல உயரம், பரப்பு, அகற்சி, நீள அகலம், தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.