English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Diffusion
n. பரப்புதல், சிதறடித்தல், பரவுதல், சிதறலுறல், விரிவுறுதல், விரிவகற்சி, கலந்தூடு பரவுதல், விரவிப் பரவுதல், விரவிப்பரவுதல், விரவி ஒன்றுபடுதல்.
Diffusion-tube
n. வெவ்வேறு ஆவிகள் கலக்கம் வீதத்தை அளக்கம் கருவி.
Diffusive
a. பரந்து விரிவுறுகிற, ஊடுபரவுகிற.
Dig
n. தோண்டுதல், பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு, தோண்டிய பகுதி, அகழ்வுப்படியளவு, குடைவு, கிண்டுதல், குத்துதல், (வினை) அப்ழ், தோண்டு, அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ், அப்ழ்ந்திடு, அஇகழ்ந்தெடு, குத்து, கிண்டு, குடை.
Dig,it
விரல், விரலகலம், இலக்கம், எண்ணின் வரிவடிவக் கூறு, சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு, கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
Digamma
n. கிரேக்க நெடுங்கணக்கில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வகர உடம்படுமெய் போன்ற ஒலிப்புடைய ஆறாம் எழுத்து.
Digamy
n. இருதார மணமுறை, இருதார மணவாழ்வு, இரண்டாவது திருமணம்.
Digastric
n. கீழ்த்தாடைத் தசைப்பற்று, (பெயரடை) இரட்டை வயிறுள்ள, இரு கோடியிலும் தடித்த முனையுடைய.
Digest
-1 n. சட்டத்தொகுப்பு, சுருக்கம், முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு, செய்திச்சுருள், நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம், இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு,.
Digest(2) v.
செரிமானம் செய், உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து, வயிற்றிற் செரிமானமாகு., பக்குவமாகு, வகைப்படுத்தி ஒழுங்காக்கு, மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து, நன்கு சிந்தித்து ஒழுங்குசெய்.
Digester
n. செரிமானம் செய்பவர், ஒழுங்டகுமுறைப்படுத்துபவர், மனத்தில் தோயவைப்பவர், செரிக்கவைக்கும் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாறு இறக்கும் கலம்.
Digestible
a. செரிக்கக்கூடிய, மனத்தில் தேயக்கூடிய.
Digestion
n. செரிமானம், செரிமானத்திறம், ஒழுங்குமுறைப்பாடு, மௌள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல், வடித்திறக்கல்.
Digestive
n. செரிமானமூட்டும் பொருள், பருவினைப் பழுக்க வைக்கம் தைலம், (பெயரடை) செரிமானம் சார்ந்த, செரிக்கவைக்கம் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
Digger
n. தோண்டுபவர், தோண்டும் விலங்கு, உலோக நாடித் தோண்டுபவர், சுரங்கத்தொழிலாளி, தங்ச் சுரங்க வேலையாள், கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர், தோண்டு கருவி, இயந்திரத்தின் அகழ்பொறி.
Dight
a. அணிசெய்யப்பட்ட, அணிகலம் பூட்டப்பட்ட (வினை) அணிசெய், அணிகலம் பொருத்து.
Digital
n. விரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
Digitallis
n. விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை, செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
Digitate, digitated
விரல் போன்ற பல பகதிகள் கொண்ட.