English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Disestablish
v. அமைப்பினைக் குலைவுசெய், திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு, பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு.
Disetert, dissertate
v. விளக்கவுரையாற்று, ஆய்வுரை நிகழ்த்து, கழறு.
Diseur
n. தனியுரைகளையும் பாடல்களையும் பாடி மக்களை மகிழ்விக்கும் பாடற்கலைஞர்.
Disfavour
n. தயவின்மை, வெறுப்பு, ஒவ்வாமை, வெறுக்கப்படுதல், (வினை) வெறுத்து நோக்கு, வெறுப்புடன் நடத்து, பாசம் தவிர், ஒத்துக்கொள்ள மறு, எதிர்ப்புக் காட்டு.
Disfeature
v. உருக்குலை, விகாரப்படுத்து.
Disfigure
v. அழகைக்கெடு, உருக்குலை, அருவருப்பாக்கு, கறைப்படுத்து.
Disforest
v. காடு அழி, காடு பற்றிய சட்டங்கள் செயற்படுதலினின்றும் விடுவி.
Disfranchise
v. குடிமையுரிமைகளைப் பறி, தேர்தல் தொகுதி வகையில் சட்டமன்றப் பிரதிநிதியைஅனுப்பும் உரிமையை மறு, வாக்காளர் வகையில் சட்டமன்றப் பிரதி நிதியைத் தேர்ந்தனப்பும் உரிமையைப் பறி.
Disfrock
v. திருக்கோயில் அதிகாரியின் உடைமையும் நிலையையும் பறி.
Disgorge
v. வாந்தியெடு, கக்கு, பறித்ததைத் திருப்பிக் கொடுத்து விடு, ஆறு முதலியவற்றின் வகையில் கழி முகத்திற்கொண்டு பாய்ச்சு.
Disgrace
n. தயவிழப்பு, வெறுப்பிகழ்வு, பதவியிலிருந்து வீழ்ச்சி, இகழ், வெட்கக்கேடு, இகழ் உண்டுபண்ணும் செயல், வீழ்சித செய்தி, பழிகேடர், வெறுப்புக்குறியஹ்ர், பழி வீழ்ச்சிதரும் செய்தி, பழிகேடர், வெறுப்புக்குரியவர்,
Disgrace ful
a. அவமானம் விளைவிக்கிற, அவமதிப்புத் தருகிற, வெட்கக்கேடான, பழிப்புக்கிடமான.
Disgruntled
a. மனக்குறை மிகுதியுடைய, உளநிறைவில்லாத, மனச்சோர்வுடைய, வாட்டமிக்க.
Disguest
n. அருவருப்பு, கடுவெறுப்பு, குமட்டல், சீற்றம், (வினை) வெறுப்புணர்ச்சி தூண்டு, அருவருப்படையச்செய், சீற்றங்கொள்ளச் செய், குமட்டுதல் உண்டாக்கு.
Disguise
n. மாறுவேடம், பொய்க்கோலம், மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல், ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை, செயற்கை ஒழுகலாறு,. ஏமாற்றுதல், ஏமாற்று, (வினை) மாறு வேடங்கொள், பொய்க்கோலம் கொள், மறைந்தொழுகு, உரு மறைத்துக்காட்டு, பொய்த்தோற்றமளி, மறைத்துவை, போர்த்து, மூடு.
Disgustful
a. வெறுப்பைத் தூண்டுகிற, அருவருப்பைத் தூண்டுகிற, வெறுப்புக்குரிய.
Dish
-1 n. வட்டில், தட்டல், வள்ளம், உண்கலம், உண்கல நிறைவளவு, தட்ட உணவு, உணவுக்கூறு, உணவுவகை, குடுவை, குழிவு, சக்கரத்தில் உட்குழிவான வடிவம், நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு, (வினை) வட்டிலிலிடு, தட்டத்தில் வைத்துப் பரிமாறு, குழிவாக்கு, குடுவையாகு, செய்திக
Dish
-2 v. எழுத்துருக்களைப் பகிர்ந்திடு.
Dishabilitate
v. தகுதியற்றதாகச் செய், உரிமையகற்று இழிவுபடுத்து, கறைப்படுத்து.
Dishabille
n. கவனக்குறைவான உடைச் சீர்க்குலைவு, அரைகுறை உடைநிலை, புற ஆடை அகற்றிய நிலை.