English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fire-worship
n. தீவழிபாடு, தீயைக் கடவுள் சின்னமாக மதித்துப் பூசிக்கும் முறை.
Firing
n. கொளுத்துதல்., தீயூட்டல், துப்பாக்கி-பீரங்கி வேட்டு, பன்மணிக் கலகலப்போசை, எரிபொருளுட்டல், சூடுபோடுதல், விறகுக்கட்டை, எரிபொருள், வெப்பூட்டுதல், கொதிகக்வதல், வேகவைத்தல், மிகு வெப்புக்காயம்.
Firing-line
n. பீரங்கி சுடும் வரம்பெல்லை, எதிரி பீரங்கி வேட்டெல்லைக்கு உட்பட்ட படைப்பகுதி.
Firing-party
n. கைதியைச் சுடும்படி கட்டளை யிடப்பட்ட படைப்பகுதி, படைத்துறைப் பிண அடக்க வேளையில் வணக்கமுறைவேட்டு இடப் பணிக்கப்பட்ட படைவீரர் பிரிவு.
Firing-point
n. தீக்கொள்நிலை, எண்ணெய் திப்பற்றிக் கொள்ளுதற்கு வேண்டிய வெப்பநிலை.
Firkin
n. மீன்-வெண்ணெய்-இன்தேறல்வகை முதலியவற்றிற்கான சிறு மிடா, முகத்தில் அளவைக்கூறு.
Firm
-1 n. கூட்டு வாணிக நிலையம், தொழிற்கட்டு.
Firm
-2 a. உறுதியான, கெட்டியான, நிலையான, அசையாத, மாறாத, நிலைநிறுத்தப்பட்ட, மாற்றமுடியாத, ஏற்றுக்கொண்ட பிறகு தள்ளுபடி செய்யமுடியாத, ஒழிக்க முடியாத, பற்றில் உறுதியுடைய, மனவுறுதியுடன் நிற்கிற, வாணிகப்பொருள்கள் வகையில் விலையில் மதிப்பும் குறையாது ஒரே படியில் நிற்
Firmament
n. வானமண்டலம், முகில்-மீன்களுக்கிடமாகக் கருதப்பட்ட விண்வலயம்.
Firman
n. (பெர்.) அரசாரணைப் பத்திரம், நன்கொடை மானியம் தனியுரிமை வழியுரிமை அளிக்கும் அரசர் கட்டளைச் சீட்டு.
Firneedle
n. ஊசியிலை மரவகையின் இலை.
Firry
a. ஊசியிலை மரவகை சார்ந்த.
First
n. முதலாவது, முதன்மையானது, முதல்வர், வரிசையில் முதன்மையானவர், முதல்வரிசை சார்ந்தவர், தேர்வில் முதல் வகுப்பிடம், உச்சநிலைவரிசை வகுப்பு, போட்டியில் முதலிடத்தவர், காலத் தொடக்கம், வரிசையில் தொடக்கம், (பெ.) முதலாவதான, காலத்தால் மிக முந்திய, வரிசையில் முதன்மையான, மிக முற்பட்ட, தலைமைச் சிறப்புடைய, அனைவரிலும் முதன்மை வாய்ந்த, அனைத்திலும் முந்திய, தொடக்கத்தைச் சார்ந்த, மேம்பட்ட, அடிப்படையான, மூலாதாரமான, (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய, (வினையடை) முதலில், முதலாவதாக, எல்லாவற்றுக்கும் முன்னதாக, முந்தி, முற்பட, குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Firstaid
n. முதலுதவிச் சிகிச்சை, மருத்துவர் வருவதற்கு முன் காயப்பட்டவருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி.
First-begoten
a. முதற் பிறந்த, மூத்த, தலைமூத்த.
First-born
n. முதற் குழந்தை, தலைச்சன் பிள்ளை, (பெ.) முதற் பிறந்த, தலையிற்றான.
First-class
a. தொடர்வண்டியில் முதல்வகுப்புச் சார்ந்த, தேர்வுப் பட்டியலில் முதல்வரிசையுள்ள, முதல்தரமான, மிகச்சிறந்த (வினையடை) முதல்வகுப்பு வண்டியில், முதல்வகுப்பாக.
First-day
n. ஞாயிறு, வாரத்தின் தலைநாள்.
First-floor
n. கட்டிடத்தின் முதல் மாடி, நிலைத்தளத்துக்கு மேற்பட்ட முதல்மாடித் தளம், அமெரிக்க வழக்கில் நிலத்தளம்.