English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Girlhood
n. சிறுமிப்பருவம், கன்னித் தன்மை.
Girlish
a. சிறுமிக்குரிய, சிறு பெண் போன்ற, சிறு பெண்ணின் பண்பு வாய்ந்த.
Girondist
n. பிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர், பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர், (பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த, பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
Girt
-1 n. முரண்கணிப்பீட்டளவை, தட்டையாயிராத பரப்புக்களில் மேடுபள்ளக் கணிப்புக்களுடன் குறுக்காகவும் சுற்றியும் எடுக்கப்படும் அளவை. (வினை) முரண்கணிப்பீட்டளவை எடு.
Girt(2), gird
-1 என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவெங்களுள் ஒன்று.
Girth
n. சேணக்கச்சு, சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை, பக்கச் சுற்றளவு, நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு, (வினை) உடலை வட்டமாக அணைந்துகிட, சேணத்தை இறுகக்கட்டு, வரிந்து கட்டு, சுற்றி வளை, சூழ், சுற்றப்பட்டை அளவு எடு.
Gist
n. கருப்பொருள், பிண்டப் பொருள், சாரம், உயிர்க் கருத்து, சுருக்கம்.
Gittern
n. தொடக்ககால நரப்பிசைக் கருவி வகை, (வினை) நரப்பிசைக் கருவி வகையை மிழற்று.
Give
n. இழைவு, தொய்வு, நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு, விட்டுக்கொடுப்பு, (வினை) தா, கொடு, பரிசாக அளி, இரவலர்க்கு ஐஸ்ம் கொடு, விலைக்குக் கொடு, செலவழி, வீணாக்கு, மணஞ்செய்து கொடு, உடைமை வழங்கு, ஒப்புவி, துற, மரபுரிமையாக விட்டுச்செல், விளைவித்து உதவு, பயனாக வழங்கு, செயல் உதவு, ஆட்படுத்து, ஈடுபடுத்து, தெரிவி,. அறிவி, இசைவளி, வாய்ப்பளி, வசதிசெய்து கொடு, இணக்கமளி, சலுகையளி, தருவித்துக் கொடு, தேடிக்கொடு, ஏற்படுத்திக் கொடு, தோற்றுவி, காட்டு, குறித்துக்காட்டு, செலுத்து, இடங்கொடு, விட்டுக்கொடு, தொய்வுறு, விழு, தகர், தளர்வுறு, தளர்ந்திறு, கரை, சுருங்கு, திற.
Given
a. கொடுக்கப்பட்ட, குறிப்பிடப்பட்ட, மனம் பற்றிய நிலையுடைய, பழகி அடிமைப்பட்டுவிட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட.
Giver
n..கொடுப்பவர், கொடையாளி.
Giving
n. கொடுத்தல், கொடுக்கப்பட்ட பொருள், (பெ.) கொடுக்கிற.
Gizzard
n. பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை, கற்குடல், மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை.
Glabrous
a. மயிர் அல்லது மென்மயிர் அற்ற, மழமழப்பான தோலுடைய, துய்யில்லாத, சிலிம்பில்லாத.
Glace
a. (பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான, மெருகிட்ட, பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட.
Glacial
a. பனிக்கட்டிக்குரிய, பனிக்கட்டிமயமான, உறைந்த, இயல்பாய் உறைநிலையிலுள்ள, எளிதில் உறைநிலைப்படுகிற, (வேதி.) மணிஉருப்பட்ட, (மண்.) பனிப்பாளம் பரவிய, பனிப்பாளத்தின் செயலாலான.
Glacialist
n. மண்ணியல் பனிக்கட்டியூழியின் செயற்பாட்டினை ஆய்பவர்.
Glaciate
v. பனிக்கட்டியின் செயலால் மெருகூட்டு, நிலத்தின்மீது சறுக்கும் பனிக்கட்டியின் செயலுக்கு உட்படுத்து.
Glaciated
a. பனிக்கட்டியின் செயலுக்குட்பட்ட வடுவுடைய, பனிக்கட்டியின் செயலால் மெருகிடப்பட்ட, பனிக்கட்டிப் பாளங்களால்ர மூடப்பட்ட, சறுக்க பனிக்கட்டித் தேக்கங்களால் மூடப்பட்ட.