English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inguinal
a. அரையைச் சார்ந்த, தொடை அடிவயிறு இணைப்புக்குதிய.
Inhabit
v. உறைவுகொள், குடியிருப்பிடமாகக் கொள், இடமாகக்கொண்டு தங்கிவாழ்.
Inhabitancy
n. குடியுரிமைக்கு இன்றியமையாத கால வரைக் குடியிருப்பு.
Inhabitant
n. நாடிடங்கொண்டு வாழ்பவர், நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்.
Inhale
v. உள்வாங்கு, வளிமணம் முதலியவற்றை மூச்சோடு, உள் இழு., புகைகுடிப்பு வகையில் புகை நுலையீரல்களுக்குள் பரவுமாற உட்கொள்,
Inharmonic
a. முரணிசையான, இசைந்து ஒலிக்காத.
Inharmonious
a. பொருத்தமற்ற, இசைந்து ஒலிக்காத, முரணிசையான.
Inhere
v. நிலையாகத் தங்கியிரு, நிலைகொண்டிரு, பற்றியிரு, பண்பு வகையில் இயற்கூறாயமைந்திரு, உரிமைவகையில் உரியவரை இயலிபாகச் சார்ந்திரு.
Inherence, inherency
பற்றியிருக்கை, உள்ளார்ந்திருக்கை, நிலையாக உள்ளிருக்கை.
Inherent
a. பற்றியிருக்கிற, இரண்டற நீங்காது உள்ளியல் பாயிருக்கிற, உள்ளாந்த, இயல்பான.
Inherit
v. மரபுரிமையைப் பெறு பின்னுரிமையாளராக அடை.
Inheritable
a. மரபுரிமையாகப் பெறத்தக்க.
Inheritance
n. மரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து.
Inheritor
n. வாரிசு, மரபு, வழியுரிமையாளர், பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர்.
Inhibit
v. தடைக்கட்டுச் செய், திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய், தடுப்பாணையிடு, திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு, தடுத்து நிறுத்து, விலக்கி வை.
Inhibition
n. தடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி.
Inhospitable
a. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான.
Inhospitality
n. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு.
Inhuman
a. மனிதத்தன்மையற்ற, பழிகேடான, கொடிய, காடடுமிராண்டித்தனமான, மனித இனப்பொதுவுக்குப் புறம்பான.
Inhumation,
மண்ணிலிடல், புதைத்தல்.