English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Intervein
v. நரம்புகள் போல குறுக்குமறுக்காகச் செல்லுவி.
Intervene
v. குறுககிடு, இடையில், நிகழ், இடையே நேர், சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு, தலையிட்டுததடு, (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு.
Intervention
n. இடையீடு, தலையீடு,. இடையிட்ட தடை, இடையிடடு இணைக்குவிப்பு.
Interview
n. காண்பு, நேரிடைக்காட்சி, (வினை) நேருக்குநேர் சந்தி, பேட்டிகாண், சந்தித்துப்பேசு.
Intervolve
v. ஒன்றிற்குள் ஒன்றாகச் சுருட்டிவை.
Interweave,
இணைத்துப்பின்னு, இசைத்து நெசவு செய்.
Interwind
v. இணைத்துச் சுருட்டு, சேர்த்து முறுக்கு.
Interwork
v. இசைத்துப்பின்னு, ஒன்றன்மீதொன்றாகச் செயலாற்று.
Inter-zonal
a. இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட, அரங்கங்களுக்கிடைப்பட்ட, பகுப்பீட்டரங்கங்களுக்குரிய.
Intestate
n. விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர்,. (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற.
Intestine,n a.
உள்ளியலான, சச்சரவு வகையில் குடும்பத்துக்கு உள்ளான, போர் வகையில் நாட்டெல்லைக்குட்பட்ட, நாட்டகமான, உயிரின வகையில் உடலுக்குட்பட்ட.
Intestines
n. pl. குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி.,
Intimacy
n. நெருங்கிய உறவுடைய நிலை, உள்ளார்ந்த பழக்கம், கள்ளப்புணர்ச்சி.
Intimate
n. மிக நெருங்கிய நண்பர், உற்றார், உற்றநேயர், (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய, நெருங்கிய உறவுடைய, உள்ளார்ந்த, உற்ற, உயிர்த் தொடர்புற்ற, நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற, (வினை) தெரியப்படுத்து, தெரிவி, குறிப்பாலறிவி, சுட்டு, குறிப்புக்காட்டு.
Intimidate
v. அச்சுறுத்து, மிரட்டு, மிரட்டி அடக்கு, அச்சுறுத்தித் தன் விருப்பப்படி நடக்கசெய்.
Intimity, n.,
தனிமை உள்ளார்ந்த தன்மை, தனிமறைவு, நெருங்கிய பழக்கம்.
Intinction
n. திருக்கோயில் ஆருளுணா வினையினல் பழத்தேறலில் அப்பத்தின் தோய்வு.
Intitule
v. பாராளுமன்றச் சட்ட உரிமையளி.
Into
prep. உள், உளளே, உள்ளாக.
In-toed
a. காலவிரல்கள் உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ள.