English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Intrusion,
தலையீடு, இடையீடு, அழையா நுழைவு, வலிந்த புகுத்தீடு, (மண்) படுகையிடையே கலவைப்பாறையின் உட் சறுக்கீடு.
Intubate
v. (மரு) குரல்வளை திறந்திருக்கும்படி அதனுள் குழாயைச் செருகு.
Intuit
v. உள்ளுணர், இயற்கை உணர், நேரடி உணர்வு பெறு.
Intuition, n.,
உள்ளுணர்வு, ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு, நேரடிப்பொறி உணர்வு, திடீர் உணர்வுத்திறம், அகத்திற உணர்வு.
Intuitionalism
n. மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
Intuitionism, n.,
உள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு.
Intuitive
a. உள்ளுணர்வாலறியப்பட்ட, ஆராயாது உணரப்பட்ட, உள்ளுணர்வால் இயக்கப்படுகிற, அயலறிவால் இயங்குகிற, உள்ளுணர்வு சார்ந்த, இயலறிவார்ந்த.
Intuitivism
n. நன்னெறிக் கூறுகள் உள்ளுணர்வைச் சார்ந்து எழுபவை என்னும் கோட்பாடு.
Intumescence
n. பரு, வீக்கம், படைப்பு.
Intumescent
a. உப்புகிற, பருக்கிற.
Intussusception
n. (உட) தன்னியலாக்க ஆற்றல், உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம், கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன்., குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல்.
Inuncton
n. நெய்யாட்டு, எண்ணெய் தடவுதல்.
Inundate
v. வௌளப்பெருக்குக்கு உள்ளாக்கு, வௌளம் அலையாந்தோட வை, வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி.
Inurbane
a. பண்பமைதியில்லாத, இணக்க வணக்கமற்ற, நாகரிகப் பண்பாடற்ற.
Inure
v. உடலெரித்த சாம்பலைத் தாழியில் இடு.
Inutility
n. பயனின்மை, பயனற்ற நிலை, ஆதாயமின்மை, பயனற்ற பொருள்.
Invade
v. படையெடுத்துத்தாக்கு,. பகைநாட்டின் மேல் தண்டெழுந்து செல், எல்லைமீறி நுழை, தாக்கு, உரிமையுள் தலையிடு, தொல்லைகொடு.
Invaginate
v. உறையிலிடு, உறையினுள்ளாகப் புகுத்து, குழாய்போன்ற உறையை அகம்புறமாகத் திருப்பு.
Invalid
-1 n. நோயாளி, பிணியாளர்., இயலாதவர், (பெயரடை) நோயாளிக்குரிய., இயலாத, ஏலமாட்டாத.