English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inversion
n. தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.
Invert
-1 n. தலைகீழ் வளைவுக் கட்டுமானம், (உள) பால் உணர்ச்சிகள் தலைமாற்றமாயுள்ளவர்.
Invert
-2 v. தலைகீழாகப் புரட்டு, தலைகீழாகக் கவிழச்செய், நிலை உறவு வரிசை ஒழுங்கு முதலியவற்றைத் தலைகீழாகத் திருப்பு.
Invertebrate
n. முதுகெலும்பில்லா விலங்கு, துணிவற்றவர், (பெயரடை) முதுகெலும்பற்ற, உறுதியற்ற, வலுவற்ற.
Investerate
a. நீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட, வேரூன்றிய, நாட்பட்ட, மாறாத, அசைக்கமுடியாத.
Investigate
v. அலசியாராய், சோதனைசெய், விசாரணை செய், உசாவு, துருவித்தேடு.
Investigture
n. சடங்கோடு பதவியில் அமர்த்தல், பணி அமர்த்தீடு,. பண்புகளிணைவித்தல்.
Investment
n. முதலீடு செய்தல், முதலீடு,. பணம் முதலீடு செய்யப்பட்ட சொத்து, பணியமாத்தீடு, பதவியேற்றல், ஆடை அணிவித்தல், முற்றுகை இடுதல், முற்றுகை.
Invidious
a. மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய, நச்சுத்தன்மையுடைய, பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய, போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
Invigilate
v. தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி, விழிப்புடன் மேற்பார்வையிடு.
Invigorate
v. எழுச்சியூட்டு, ஊக்கமூட்டு, உயிர்ப்பளி.
Invincible
a. வெல்லமுடியாத,. வென்று கொள்ள முடியாத.
Inviolable
a. மீறத்தகாத, அவமதிக்க ஒண்ணாத, கேடணுகத்தகாத, முழுநிறை காப்புடைய.
Inviolate
a. சேதத்துக்காளாகாத, கேடுறாத, சிதையாத, மீறப்படாத, தூய்மை கெடாத.
Invisible
a. கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான.
Invisible Darning
தோன்றாத் தையலீடு
Invitation
n. விரும்பி அழைத்தல், வேண்டுதல், அழைப்பிதழ், அழைப்புத்தாள், கவர்ச்சி.
Invite
n. (பே-வ) அழைப்பு, (வினை) அழை, வரவழை, வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங, வருமாறு வேண்டு, செய்யும்படி தூண்டு, வரவேற்கும் விருப்பம் தெரிவி, எற்கும் மனப்பாங்கு காட்டடு, கவனம் கவர், கவர்ச்சியுடையதாயிரு,. தூண்டுதலளி, செயற்காரணமாயியலு.
Invocation
n. வேண்டுதல், நேர்வு வழிபாடு, வேண்டுதல் வழிபாட்டுதம் தொடக்க வாசகம், திருக்கோயில் வழிபாட்டில் வேண்டுதல் வாசகம், வேண்டுதலுக்குரிய இறைவிளி வாசகம், வேண்டப்படுபவருக்குரிய விளி அடைமொழி, வரம்வேண்டுதல், தெய்வ ஆவி அழைப்பு, ஆவாகனம்.