English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Iolite
n. அலுமினியக் கன்மம் இரும்பு வௌளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை.
Ion
n. இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வௌதயிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.
Ionian
n. அட்டிகா மேற்கு ஆசியா மைனர் முதலிய நிலப்புரப்புக்களில் பண்டு பரவிய கிரேக்க இனப் பிரிவின் உறுப்பினர், (பெயரடை) அயோனியாவைச் சார்ந்த.
Ionic
a. அயோனியாவைச் சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய அயோனியப் பிரிவு சார்ந்த.
Ionium
n. சேண்மம், விண்மத்திலிருந்து கிடைக்கும் அணுச்சிதைவார்ந்த நுண்ணதிர்வுடைய தனிப்பொருள் வகை.
Ionosphere
n. மீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி.
Ionterpunctuate
v. நிறுத்தக்குறியிடு.
Iota
n. கிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து, இம்மி, மிகச் சிறிய அளவு, சிறு துகள்.
Iotacism
n. கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
IOU
n. வெண்ணிலைக்கடன் உறுதிச்சீட்டு, வெண்ணிலைக்கடன் சீட்டு, தொகை குறிப்பிடப்பட்ட கடன் உறுதிக்குறிப்பு.
Ipecacuanha
n. வாந்தியும் வயிற்றுப்போக்கும் உண்டாக்கும் தென். அமெரிக்க மூலிகை வேர்.
Ipse dixit
n. வாதமுறை சாரா ஆணைக்கூற்று.
Ipsissima verba
n. pl. வழுவற்ற சரிடியான சொற்கள்.
Ipso facto
adv. அவ்வுண்மை காரணமாகவே, அது காரணமாகவே.
Irade
n. துருக்கி சுல்தானின் எழுத்துமூலக் கட்டளை.
Irak, `Iraq
மெசபோடேமியர் உள்ளிட்ட அராபிய அரசு.,*,
Irascible
a. எளிதில் கோபிக்கிற, முன்கோபியான.
Irate
a. கோபமுள்ள, சினமுடைய.
Ire
n. கோபம், வெகுளி, சினம்.
Irenic, irenical
அமைதி குறிக்கொண்ட, சமாதானத்தை நோக்கமாகவுடைய.