English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Manuscript,
கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி.
Manward
a. மனிதர்பக்கம். நோக்கிய, மன்னினம் நாடிய.
Manx
-1 n. மேன் தீவினைச் சார்ந்தவர், மேன்தீவு, வாலில்லாப் பூனைவகை, (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த.
Manx(2),n. pl.
மேன் தீவு மக்கள்.
Manxman
n. மேன் தீவில் வாழ்பவர்.
Many
v. பலர், பல, (பெயரடை) பல.
Manyplies
n. (பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
Many-sided
a. பல பக்கங்களுள்ள, பல தோற்றக்கூறுகள் உடைய, பல்வகையான ஆற்றல்கள் அமைந்த, பல பண்புத் திறங்கள் கொண்ட.
Many-sideness
n. பலவகை ஆற்றல்கள் கொண்ட தன்மை, பல்திறப் பண்புகள் நிறைந்த நிலை.
Maoeuvre
n. படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம், படைத்துறை நடவடிக்கை, கண்மாறாட்ட நடவடிக்கை, ஏய்ப்பு நடவடிக்கை, திறமைவாய்ந்த திட்டம், (வினை) சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்சித்திறமூலம் செயலாற்றுவி, தூண்டி இயக்கு, முனைந்து திட்டமிட்டு வேலைசெய், மறைதிட்ட மூலம் எற்பாடு செய்.
Maori
n. நியூசிலாந்தில் வாழும் பழுப்பு நிற இனத்தவர், நியூசிலாந்தின் பழுப்பு நிற இனத்தவர் மொழி.
Map
n. நட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு.
Maple
n. சர்க்கரை தரும் அழகுடைய நிழல் தரு மரவகை, அழகுடைய நிழல் தரு மரவகையின் கட்டை.
Maquis
n. பிரஞ்சு நாட்டில் 1ஹீ3ஹீ-45ஆம் ஆண்டப்போரில் ஈடுபட்ட நாட்டுப் பற்றாளர் படை.
Mar
v. கடு, அழி, முழுதும், பாழ்படுத்து, பதங்கெடு, அழிவுவேலை செய்.
Marabou
n. மேற்கு ஆப்பிரிக்க பெரு நாரை வகை, தொப்பிகளில் அழகுக்காகச் செருகப்படும் கொக்கு இறகின் கொதம்து.
Marabout
n. வட ஆப்பிரிக்க வழக்கில் முஸ்லீம் துறவி, முஸ்லீம் துறவியின் கல்லறைமாடம்.
Maraschino
n. சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை.
Marathon
n. நெடுநீள ஓட்டப்போட்டி, எல்லைமீறிய பொறுமை தேவைப்படும் முயற்சி.