English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maraud
v. கொள்ளையடி, சூறையாடு, திருடு, திருடித்திரி.
Marauder
n. கொள்ளைக்காரன்.
Maravedi
n. (வர) ஸ்பரினய நாட்டு நாணயம்.
Marble
n. சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி.
Marbles
n. pl. கழங்கு, கோலிக்காய்.
Marc
n. பழச்சக்கை, அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது.
Marcan
a. தூயதிரு மார்க் சார்ந்த.
Marcasite
n. கந்தகக்கல், வௌளை இருப்புக்கந்தகக்கல்.
Marcel;
n. தலைமயிரில் செயற்கையாக ஒப்பனை செய்யப்பட்ட அலைபோன்ற தோற்றம், (வினை) தலைமயிருக்கு அலைபோன்ற செயற்கைத் தோற்றமளி.
Marcescent
a. செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற.
March
-1 n. ஆங்கில ஆண்டின் மூன்றாம் மாதம்.
March
-2 n. (வர) எல்லை, எல்லைப்புறம், இருநாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி, (வினை) பொது எல்லைப்புறம் கொண்டிருப்பது.
March
-3 n. அயிவகுப்பியக்கம், அணிவகுப்பு முன்னேற்றம், அணிகடப்பு., அணி கடந்த தொலை, அணிஇயக்க இசை, ஒழுங்குமுறைப்பட்டநடை, நெடுந்தொலைக் கடுநடை, போக்கு, கடப்பு, செலவு, (வினை) அணிவகுத்துச் செல், அணிவரிசையில் செல், ஒழுங்குபட்ட நடையுடன் செலர், கடந்து செல், முன்னேறு, தளர
Marches
n. pl. இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதி.
Marchioness
n. கோமகள், தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள், கோமாட்டி, கோமான் மனைவி, கோமான் உரிமைக் கைம்பெண்.
Marchpane
n. வாதுமைப் பண்ணியம், வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம், வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு.
Marconi, marconigram
n. சோணொலிச் செய்தி, கம்பியில்லாத் தந்திமூலம் அனுப்பப்படும் செய்தி.
Mardigras
n. நீற்றுப் புதன்கிழமைக்கு, முந்திய செவ்வாய்க் கிழமை, நோன்வு விழாவின் கடைசி நாள்.
Mare
-1 n. பெண் குதிரை, குதிரையின் விலங்கின் பெண்.