English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mare(2), mareclausum
n. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி.
Marechal Niel
n. ரோசா இனத் தழுவு கொடிவகை.
Mareliberum
n. பொதுக் கடற்பகுதி, அனைத்து நாடுகளுக்கும் பொதுவுரிமைப்பட்ட கடற் பெரும்பகுதி.
Maremma
n. உடல்நலத்துக்கொவ்வாத கடலடுத்த சதுப்பு நிலப்பகுதி.
Mares-nest
n. குதிரைக்கூடு, முயற்கொம்பு வேட்டை, பயனில் மாயக் கண்டுபிடிப்பு.
Margarine
n. செயற்கை வெண்ணெய்.
Margay
n. புலிபோன்ற தென் அமெரிக்க காட்டுப்பூனை வகை.
Margin
n. எல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
Marginal
a. ஓரத்துக்குரிய, ஓர இடஞ்சார்ந்த, ஓர இடத்திலுள்ள, ஓர இடத்தில் வரையப்பட்ட, ஓரக்குறிப்புக்களையுடைய, எல்லைக்கோடியடுத்த, விளிம்படுத்த, நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.
Marginalia
n. pl. ஓரக்குறிப்புகள்.
Margrave
n. (வர) புனித ரோமப் பேரரசின் இளவரசர்களுக்கு அளிக்கப்பட்ட செர்மானிய பட்டப்பெயர், எல்லைப் புற மாகாணத் தலைவர்.
Margravine
n. புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர், எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Marguerite
n. பெரிய மலர்களையுடைய சிறு தோட்ட மலர்ச்செடி வகை.
Mariage de convenance
n. ஆதாயத் திருமணம், தன்னல ஆதாய நோக்குடன் செய்யப்படும் திருமணம்.
Marian
n. (வர) ஸ்காத்லாந்து அரசி மேரியின் ஆதரவாளர், (பெயரடை) தூய கன்னி மரியாளை வரிபடுகிற, (வர) இங்கிலாந்தில் ஸரகாத்லாந்து அரசி மேரிக்கு ஆதரவான.
Marid
n. (அரா) ஆற்றல்மிக்க ஆவி பேய்.
Marigold
n. பொன்வண்ண மலர்களுள்ள செடிவகை.
Marihuana, marijuana
புகை குடிப்பதற்குரிய கஞ்சாச்சருகுப் பூஞ்சுருட்டு.
Marimba
n. முற்பட்ட நாகரிகநிலையில் உள்ள ஆப்பிரிக்கர்கள் வழங்கிய மரக்கட்டைகளால் ஆன இசைக்கருவி வகை, தற்கால பலிலியக் கருவிவகை.