English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mays
n. pl. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு, மே வாரத்தில் தேர்வு, மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள்.
Mazard
n. சிறிய கறுப்புப் பழவகை.
Mazarin
n. திண் கருநீலம்., (பெயரடை) அடர்நீல நிறமான.
Mazdaism
n. தொல் பழங்காலப் பாரசீகரின் சமயநெறி, பார்சி சமயம்.
Maze
n. புதிர்நெறி, ஏடாகோடமான வழி சிக்கல் வலைப்பின்னற் போக்கு, குழப்பம், (வினை) குழப்பு, திகைப்பூட்டு.
Mazer
n. (வர) வௌளிச்சட்டம் போடப்பட்டுள்ள கெட்டிக் கட்டையாலான பருகுகலம்.
Mazurka
n. போலந்து நாட்டுச் சிறுதிற ஆடல் வகை, போலந்து நாட்டு ஆடலுக்கான இசையமைப்பு.
McCarthyism
n. அமெரிக்காவில் பொது உடைமையரென ஐயுறப்பட்டவர்களைப் பணிகளிலிருந்து நீக்கிவிடும் செயல்முறைக் கோட்பாடு.
Me, pronl.
என்னை, எனக்கு, நானே, என்னையே.
Mead
-1 n. கடுந்தேறல் வகை, தேன்-நீர்க் கலவை வெறியம்.
Mead
-2 n. (செய்) பசும்புல்வௌத.
Meadow
n. பசும்புல்நிலம், நீர்வளமுள்ள தாழ்நிலம், ஆற்று நீர்வளத் தாழ்நிலப்பகுதி.
Meadow-sweet
n. ரோசா இனமலர்ச் செடி வகை.
Meagre
n. நடுநிலக் கடலக மீன் வகை, (பெயரடை) சதையற்ற, ஒல்லியான, ஏழ்மையான, எளிய, குறைவாயுள்ள, போதாத, சிலவான, அருகலான, வலுவற்ற, திட்பமற்ற, நிறைவற்ற, அரைகுறையான.
Meal
-1 n. மாவு, கூலமா, தூள், தூளான பரப்பு, (வினை) மாவாக்கு, மாவாக அரை, தூளாக்கு, மாவுமேலிட்டுத தூவு, நிறைய மாச்சத்தளி.
Meal
-2 n. உணவு, சாக்பாடு, சிறப்பு ஊண, உண்ணும் பொருள், ஒரே கறவையில் பசு கொடுக்கும் பாலின் அளவு, (வினை) உணவு உண்ணு.
Mealies
n. pl. தென்னாப்பிரிக்க மக்காச் சோள வகை.
Mealtime
n. உணவு நேரம், வழக்கமாக உணவருந்தும் வேளை.
Mealy,
மாவுக்குரிய, மாப்போன்ற, வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட, குதிரை வகையில் புள்ளிகளுள்ள, முகத்தோற்ற வகையில் வௌதறிய.