English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mealy-bug
n. கொடிமுந்திரியை அரிக்கும் வேண்பொடியுருவான பூச்சியுருவான.
Mealy-mouthed
a. மழுப்பிப் பேசுகிற, மென்னயத்துடன் பசப்புகிற, தளுக்காக உரையாடுகிற.
Mean
-1 n. இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
Mean
-2 a. கீழ்த்தரமான, இழிந்த, ஏழ்மைமிக்க, மதிப்பில், குறைந்த, மட்டமான, அற்பமான, குறைவான, இழிதோற்றமான, குறுகிய, நோக்கமுள்ள, பெருந்தன்மையற்ற, கஞ்சத்தனமான, வாய்ப்பின்பமுள்ள, பகையெண்ணங் கொண்ட, எளிதில் கோபங்கொள்கிற, (பே-வ) வெட்கி ஒதுங்குகிற.
Mean
-3 v. கருது, எண்ணங்கொள், உட்கொள் உடையராயிரு, குறிக்கொண்டிரு, மனத்துட்கொண்டிரு, குறித்து வைத்திரு, பொருள்கொள், பொருள்படு, குறி, கருத்திற் சுட்டு, குறித்துக்காட்டு.
Meander
n. வளைவு நௌதவான அணிவேலைப்பாடு, வளைவு, நௌதவு, சுற்றுவழி, திகைப்பு, (வினை) வளைந்து நௌதந்து செல், சுற்றி அலைந்து திரி.
Meanders
n. pl. ஆற்றின் வளைவு நௌதவுப்போக்கு, திருகு நெறி, வளை நௌதவுப்பாதை, சுற்றுவழிப்பயணம், வளைவு நௌதவான அணி வேலைப்பாடு.
Meandrine
a. வளைந்து நௌதந்து செல்கிற, மனித மூளை போன்ற தோற்றமுடைய, பவள வகையில் வளைவு நௌதவுகள் நிரம்பிய.
Meaning
n. பொருள், விளக்கம, கருத்து, (பெயரடை) பொருள் தருகிற, தனிக்கருத்துள்ள, குறிப்பிடத்தக்க.
Meanness
n. கஞ்சத்தனம், கயமை.
Means
-1 n. வழிவகை, கருவி வகைதுறை, துணைப்பொருள்.
Means
-2 n. pl. செல்வ ஆதாரம், வருவாய் வகை, செல்வம், பணவளம்.
Meantime, meanwhile
இடைநேரம், (வினையடை) இடைநேரத்தில்.
Measles
n. pl. தட்டம்மை, புட்டாளம்மை, அம்மைக் கொப்புளங்கள், பன்றியின் நோய்வகை.
Measly
a. தட்டம்மை நோய் சார்ந்த, தட்டம்மை நோயால் பீடிக்கப்பட்ட, வெறுக்கத்தக்க, இழிவான.
Measure
n. அளவு, அளவை, அளவு முறை, அளவெல்லை, அளவெண், பருமன்,. முகத்தலளவைக்கூறு, படியளவு, நீர்ம அளவு கலம், அளவுக்கருவி, அளவுப்பட்டை, அளவு கோல்., வரையளவு, படிக்கூறு, யாப்பமைதி, சந்தம்வ, தாளம், நடவடிக்கை, சட்டமன்றச் செயல்முறை, (கண) மடங்டகெண், (வினை) அள, அளவிடு, அளந்தறுதி செய், பருமன் மதித்தறி, நீள-அகல-உயரங்கள் கண்டுணர், மதித்துணர், மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி, பாத்திடு, அளந்து வழங்கு, குறித்து அளவு பிரித்தெடு., அளவொப்பிடு, போட்டியிடு, கடந்துசெல்.
Measured
a. அளவிடப்பட்ட, கணக்கிடப்பட்ட, சீர்தூக்கி மதிப்பிடப்பட்ட, ஒழுங்குபட்ட, சந்த வயப்பட்ட.
Meat
n. இறைச்சி, புலாலுணவு, மீன் கோழி-நீங்கலான ஊனுணவு, உணவு.