English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mediaeval
a. வரலாற்றின் இடைநிலைக்காலத்திய, இடைநிலைக்காலப் பாணியைப் பார்த்துப் பின்பற்றிய.
Medial
a. இடையிலுள்ள, மையத்திலுள்ள, மட்டான பருமனுள்ள, நடுத்தரமான, இடைநிலையான, சொலிலிடை நிகழ்வான, சராசரிக்குரிய.
Median
n. நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
Mediant
n. (இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி.
Mediastinum
n. உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ், நுரையீரல் இடையிதழ்.
Mediate
a. இடைப்பட்ட, இடையீடான, பிறிதூழி இடையீடுடைய, இடையீடுமூலஞ் செயலாற்றுகிற, டடைப்பட் கருவியோடு தொடர்பு கொண்ட, இடையீடான சாதனத்தை உள்ளடக்கிய, (வினை) இடைநின்றிணை, நடுவராயிருந்து இணக்குவி, தொடர்பு படுத்து, இடையீட்டாளராகச் செயலாற்று, நடுவராயிரு, இடைநின்று பரிந்துரை, இடைநிலையிடம் பெறு,. வாயில் மூலஞ் செயலாற்று, வாயிலாயிருந்து காரிய மாற்றுவி,. ஊடாயிருந்து விளைவி.
Mediatize
v. அரசு ஒட்டிணை, முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோ டு சேர், இடைமுகவர் மூலம் செயலாற்றுவி, துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி, தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து.
Mediator
n. இடையீட்டாளர், இயேசுநாதர்.
Medicable
a. குணப்படுத்தக்கூடிய, சரிப்படுத்தக்கூடிய, சிகிச்சைக்குரிய.
Medical
n. (பே-வ) மருத்து மாணவர், (பெயரடை) மருத்துவக் கலை சார்ந்த, மருந்தாட்சிக்குரிய, மருத்துவத் துறையில் அறுவைமுறை சாராத.
Medical union
மருந்தக ஒன்றியம்
Medicals
மருந்தகம், மருந்துக்கடை, மருந்து விற்பனையகம்
Medicament
n. குணப்படுத்தும் மருந்து.
Medicaster
n. போலி மருத்துவர்.
Medicate
v. பண்டுவம் பார், மருந்துகொடு, மருந்துடன் கல, மருந்து சார்ந்த பொருளைக் கருவாகக் கல.
Medicean
a. பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த.
Medicinal
a. மருந்து சார்ந்த, குணப்படுத்தும் பண்புகள் கொண்ட, குணப்படுத்துகிற.
Medicine
n. மருந்து, மருத்துவத்துறை, மருத்துவக்கலை, உட்கொள் மருந்து, நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை., (வினை) மருந்துகொடு, மருந்தினால் குணப்படுத்து.
Medicine-man
n. நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி.