English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Meeting-house
n. கிறித்தவ சமயப் பிரிவினரின் வழிபாட்டிடம்.
Megacephalic
a. பெருந்தலையுடைய.
Megalith
n. பாரக்கல், பெரிய நினைவுச்சின்னக் கல்.
Megalithic
a. பாரக்கல் சார்ந்த, பெருங்கல்லாலான, பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
Megalomania
n. தற்புகழ்ச்சிக் கிறுக்கு, தற்பெருமைக் கோளாறு, உயரவாப்பித்து.
Megalosaurus
n. மரபற்றுப்போன பாரிய ஊனுணிப் பல்லியுருவ விலங்கு.
Megaphone
n. நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம், ஒலிபெருக்கி, (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி.
Megapod, megapode
மணல் மேடிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை வகை.
Megascope
n. ஔத விளக்கப்படக் கருவி வகை.
Megascopic
a. இயல்பாவவே தௌதவாகத் தெரிகிற, எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய.
Megaton, n.,
பத்திரலக்கம் டன் எடை.
Megawatt
n. 1000 'கிலோவாட்' மின்கூறு.
Megger
n. மின் தடைகாப்பின் தடையாற்றல்மானி.
Megilp n.
வண்ணந் தேய்க்கிற கலவை எண்ணெய்வகை, ஆளிவிதை எண்ணெய்-கற்பூரத் தைலக் கலவை.
Megohm
n. பத்து நுழறாயிரம் மின் தடையாற்றல் அலகு.
Megrim
-1 n. ஒற்றைத் தலைவலி, திடீரெண்ணம், விந்தைக் கருத்து, போலிப்புனைவு, ஆதாரமில்லாத நம்பிக்கை.
Megrim
-2 n. மழமழப்பான தட்டை மீன்வகை.
Megrims
n. pl. எழுச்சியின்மை, மனச்சோர்வு நிலை, வெறி எண்ணம் அச்சந் தருகிற மனநோய் வகை, குதிரைக் கிறுகிறுப்பு நோய்.
Meickey mouse
n. திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர், (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி.
Meiosis
n. மென்னயச் சாட்டுக் குறிப்புரை, குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை, கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு.