English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Meat-offering, n.,
மாவும் எண்ணெயும் கூடிய தெய்விகப்படையல்.
Meat-safe
n. இறைச்சிப்பெட்டி.
Meatus
n. நாடிக்குழாய், செல்குழாய்.
Meaty
a. சதைப்பற்றுள்ள, கொழுத்த, இறைச்சி சார்ந்த, இறைச்சி போன்ற, பொருட்செறிவுள்ள, பொருள் நிறைவுள்ள.
Mecca
n. நபி நாயகத்தின் பிறப்பிடம், காணவிழையும் இடம், கொள்கைப் பிறப்பிடம்.
Meccano
n. இயந்திர உறுப்புக்களின் நுட்பமாதிரித் தொகுதி.
Mechanic
n. கம்மியர், கலைவினைஞாத், பொறித்துறை வினைஞர்.
Mechanical
a. இயந்திரத்துக்குதிய, சிறு கைத்தொழில் சார்ந்த, இயந்திர நுட்பம் சார்ந்த, இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற, இயந்தரங்களால் ஆக்கப்படுகிற, இயந்திரத்தின் தன்மையுடைய, தானே இயுரகுகிற, இயல்நிலை இயக்கமுடைய, உயிர்ப்புத்திறமற்ற, அறிவுத்திறமற்ற, தன் முதன்மையற்ற, தன் செயலற்ற, மாறாத, கண்மூடி மரபான, மரபுவழிப்பட்டியங்குகிற, இயக்கஞ் சார்ந்த, உள்நரப்பியக்கம் சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த, இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
Mechanician
n. இயந்திர அமைப்பு வல்லுநர்.
Mechanics
n. இயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை.
Mechanism
n. இயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம்.
Mechanist
n. இயந்திர அமைப்பு வல்லுநர், இயந்திர ஆக்கத்தொழிலர், இயந்திர வல்லுநர், இயக்க வல்லுநர், (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்.
Mechanize
v. இயந்திரமயமாக்கு, இயந்திரக் கருவியாக மாற்று, இயந்திர விசையூட்டு, இயந்திர ஆற்றலாலியக்கு, இயந்திர ஆற்றல் மேற்கொள்ளுவி.
Mechlin, Mechlin lace
n. பொன்னிழைக்கச்சை வகை.
Meconic acid
n. வெண்பளிங்கு போன்ற தோற்றமுடைய அபினிக்காடி.
Medal
n. சின்னப்பூ, பதக்கம, பட்டயத்தகடு, பதக்க உருவப்படம்.
Medallion
n. பெரிய பதக்கம், பட்டயத்தகடு, பதக்க உருவப்படம்.
Medallist
n. பதக்கம் செதுக்குபவர், பதக்க உரு வரைபவர், பதக்கம் பெற்றவர்.
Meddle
v. தலையிடு, குறுக்கிடு, இடையிற் புகு.
Media
n. நலிந்த தடையொலி வல்லெழுத்தின் மெல்லொலி, குருதிக்குழாயின் இடை மென்றோல்.