English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Messmate
n. உணவுபந்தித் தோழர், ஒன்றாக உடனமர்ந்து உண்ணுபவர்.
Messuage
n. (சட்) சூழ்நிலமனைகளின் வழங்குரிமையுடைய குடியிருப்பு வீடு.
Mestizo
n. ஸ்பானிய அல்லது போர்ச்சுக்கீசிய வழக்கில் கலப்பினப் பிறவியான குழந்தை.
Met
v. 'மீட்' என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
Metabolic
a. ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு, உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு.
Metabolize
v. உயிரியல் மாறுபாடு உண்டுபண்ணு,
Metacarpus
n. மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இபட்ட உள்ளங்கைப் பகுதி, உள்ளங்கை எலும்பு, விலங்கின் கணுக்காலக்கும் கால்விரலுக்கும் இடைப்பட்ட பகுதி, உள்ளங்கால் எலும்புப்பகுதி.
Metage
n. நிலக்கரி-கூல முதலியவற்றிற்குரிய பணித்துறை எடையளவு, எடையளவுக்குரிய தீர்வை அளவு.
Metagenesis
n. ஒற்றைமாற்றுத் தலைமுறை, பால் சார்ந்த இனப்பெருக்கத்துடன் பால்சாரா இனப்பெருக்கம் தலைமுறை தோறும் மாறி வருதல்.
Metagenetic
a. ஒற்றைமாற்றுத் தலைமுறையான.
Metal mart
உலோக அங்காடி, மாழை அங்காடி, உலோகக்கடை
Metal works
உலோகத் தொழில்கள், பொன்மவேலைகள்
Metal,
உலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.
Metallic
a. உலோகம் சார்ந்த, உலோக வகைக்குரிய, உலோகப்பண்பு வாய்ந்த.
Metallize
v. உலோகம் போன்றதாக்கு, தொய்வகத்தைக் கந்தகம் கலந்து திண்ணிதாக்கு.
Metallography
n. உலோக உள்ளமைப்பியல் ஆய்வுத்துறை.
Metalloid
n. உலோகப்போலி, ஒருசார் உலோகப்பண்புகளும் ஒருசார் உலோகச்சார்பற்ற பொருள்களின் பண்புகளும் உடைய பொருள்கள், (பெயரடை) உலோகத்தின் தோற்ற வடிவமுடைய.
Metallurgic, metallurgical
a. உலோகத் தொழிற்கலை இயலுக்குரிய.
Metallurgist
n. உலோகத்தொழிற் கலையியலாளர்.
Metals
n. pl. இருப்பூர்திக்குரிய தண்டவாளங்கள்.