English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Methodism
n. கிறித்தவத் திருமுறை பரப்பும் கிளைச்சமயத்தவரின் கொள்கை நடைமுறைக் கோட்பாட்டுத்தொகுதி.
Methodist
-1 n. ஒழுங்குமுறை பின்பற்றுபவர், உயிர்நுல் துறையில் தொகை வகைமுறை கையாள்பவர், கண்டிப்பான சமயக் கோட்பாடுடையவர்.
Methodist
-2 n. சார்ல்ஸ் வெஸ்லி ஜான் வெஸ்லி ஜார்ஜ் ஒயிட் பீல்டு முதலியோரால் தொடங்கப்பட்டு இணைந்த கிடிறித்டதவத் திருமுறை பரப்புக்குழுவின். உறுப்பினர்.
Methodistic, Methodistical
a. கிறித்தவத் திருமறை பரப்பும் கிளைச்சமயக் குழுவினரைப் போன்ற.
Methodize
v. ஒழுங்குமுறைக்கு உட்படுத்து, தொகை வகைப்படுத்தி ஒழுங்குசெய்.
Methodology
n. ஆராய்ச்சிமுறை நுல்.
Methuselah
n. விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர், பல்லாண்டு வாழ்நர்.
Methyl
n. மரத்தேறல் சத்து, மரத்தேறல் முதலிய பல வெறியவகைகளின் அடிப்படைக்கூறு.
Methylate v.
மரத்தேறல் கல, குடிபொருள் தகுதியும் வரி விதிப்பும் நீங்கும்படி தேறல்வகைகளில் மரத்தேறற் சத்தூட்டு, மரத்தேறற் சத்துச்செறிவி.
Methylated
a. மரத்தேறற் சத்தூட்டப்பட்ட, குடிநீர்மை நீக்கப்பட்ட.
Meticulous
a. மிக உன்னிப்பான, விவரங்களை விடாமற் கவனிக்கிற.
Metis
n. வௌளையருக்கும் அமெரிக்க செவ்விந்தியருக்கும் பிறந்தவர், கானடாவில் வௌளையர் செவ்விந்தியர் கலப்புப் பிறவியாளர்.
Metonic cycle
n. முழுநிறைமதிவட்ட ஊழி, சந்திரனின் இயக்கமாறுபாடுகள் அனைத்தையும் உட்கொண்ட 1ஹீ ஆண்டு அல்லது 235 மதிமான மாதக் காலம்.
Metonym
n. ஆகுபெயராக வழங்கப்படுஞ் சொல்.
Metonymy
n. ஆகு பெயர், காரிய ஆகுபெயர், பண்பாகு பெயர்.
Metope
n. (க-க) பழங் கிரேக்கரின் சிற்ப முறையில் தூண்டி நடுமுகப்புக் கூறு.
Metre
-1 n. சீர், சீர்தளையாப்பமைதி, யாப்பு வகை, பா வகை, தாளம், இசைக்குரிய காலக்கணிப்பு.
Metre
-2 n. பதின்மான முறையில் அமைந்த பிரஞ்சு நீட்டலளவை அலகு, 3ஹீ.3ஹ் அங்குலம் கொண்ட நீட்டலளவு.
Metreology
n. எடையளவுகள் ஆய்வுநுல்.