English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Million
n. பத்து இலட்சம், பத்து இலட்சம் எண்ணிக்கை யுள்ள பொருள்களின் தொகுதி, ஆங்கில நாட்டுப் பத்து இலட்சம் பொற்காசுகளின் தொகுதி.
Millionair
n. கோடீசுவரர், பெருஞ்செல்வர்.
Mill-pond
n. ஆலையைச் செலுத்துவதற்கான நீர்கொண்டிருக்கும் குளம், (பே-வ) அடட்லாண்டிக் மாகடல்.
Mill-race
n. ஆலைச்சக்கரத்தைச் செலுத்துகிற நீரோட்டம்.
Mills bomb
n. முட்டை வடிவக் கை வெடிகுண்டு.
Millstone
n. ஏந்திரப் கற்களில் ஒன்று, மிகப் பளுவான சுமை.
Mill-wheel
n. ஆலையைச் செலுத்துவதற்கான நீரியங்கு சக்கரம்.
Millwright
n. ஆலைகளை அமைப்பவர், ஆலை அமைப்புத் திட்டமிடுபவர்.
Milor, milord
பிரஞ்சு வழக்கில் ஆங்கில நாட்டுப் பெருமகன், பெருஞ் செல்வரான ஆங்கிலேயர்.
Milreis
n. 4ஷிலிங் 5 பென்னி மதிப்புள்ள குன்னாள் போர்ச்சுக்கீசியப் பொற்காசு.
Milt
n. (உள்)மூ மண்ணீரல், மின் சினை, (வினை) பெண்ட மீன் வகையில் சினைப்படுத்து, கருவுயிர்க் செய்.
Miltonic
a. ஆங்கில கவிஞரான மில்டனுக்குரிய,. மில்டன் நடையிலுள்ள.
Mime
n. பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து, அவிநயக்கூத்தாடி, நகைவேழம்பர், கோமாளி, (வினை) வாய்பேசாது அவிநயங்காட்டிக் கூத்தாடு.
Mimeograph
n. கையெழுமத்துப்படியின் பலபடி எடுப்பதற்கான தகடு ஆக்கஅமைவு, (வினை) படியாக்கத்தகடு செய்வதற்கான அமைவினால் படிகள் எடு.
Mimesis
n. (உயி) விலங்குடன் விலங்கு அல்லது பிற அஃறிணைப் பொருளுக்குள்ள புற ஒற்றுமை.
Mimetic,
ஒப்புப் போலி நடிப்பாளர், போலி நகை நடிப்பாளர், (பெயரடை) பிறிதுபோல் நடித்துக் காட்டுவதில் திறமையுடைய, பிறர்போல் போலிப் பாசாங்கு செய்கிற.
Mimic
n. பிறர்போல் நடித்துக் காட்டுவதில் திறமையுடையவர், (பெயரடை) பிறர்போல் போலியாக நடிக்கக்கூடிய,போலரியான, பாசாங்கான, (வினை) போலியாக நடித்துக் கேலிசெய், பிறர்போல் நடித்து நையாண்டி செய்.
Mimicked
v. 'மிமிக்' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Mimicking
n. ஒப்புப்போலி நையாண்டி, (பெயரடை) ஒப்புப்போலி நையாண்டி செய்கிற.
Mimicry
n. நடையுடை தோற்ற ஒப்புப்போலிப் பொருள், (உயி) ஒப்புப்போலிப் பண்பு, புறத்தோற்றத்தில் ஒரு விலங்கு மற்றொன்றை ஒத்திருத்தல்.