English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Miminy-piminy
a. நயநாகரிக மினுக்கம் வாய்ந்த, அளவு மீறி நாகரிகமுடைய, திருத்தமும் தௌதவுமுடைய.
Mimosa
n. 'தொட்டாற் சுருங்கி' யை உள்ளடங்கிய துவரை இனக் குத்துச் செடிவகை.
Mina
-1 n. மலர்ச்செடி இனம்.
Mina
-2 n. நாலு பொன் மதிப்புடைய பண்டைய கிரேக்க நாணய வகை, கிரேக்க எகிப்திய வழக்கில் எடை அளவுக. கூறு.
Mina
-3 n. நாகணவாய்ப்புள், சிட்டுக்குருவி இனத்தைச் சார்ந்த பறவை வகை.
Minacious
a. அச்சுறுத்துகிற, கிலியூட்டுகிற.
Minar
n. கலங்கரை விளக்கம்,. தூபி.
Minaret
n. பள்ளி வாயில் தூபி.
Minatory, n.,
அச்சுறுத்துகிற.
Mince
n. கொத்திறைச்சி,. குறுக அரிந்த கறித்துண்டு, (வினை) கொத்து, குறுக அரி, மறைத்துப் பேசு, மினுக்கி நட,.
Mincemeat, n.,
உறையப்ப உள்ளீடான உலர்பழ வெல்லம் பாகடைக் கலவையுறை.
Mince-pie
n. உறையப்பம், உலர்பழம் வெல்லம் பாகடை உறையிட்ட பண்ணிய வகை.
Mincin
n. மழுப்பல், தளுக்குப்பேச்சு., மினுக்குநடை, (பெயரடை) முழுதும் பேசாதடக்குகிற, தளுக்காகப் பேசுகிற, மினுக்கி நடக்கிற.
Mincing Lane
n. தேயிலை முதலிய இறக்குமதிச் சரக்குகளின் மொத்த வாணிகக்களம்.
Mind
n. உள்ளம்,. மனம், உள்ளக்கருத்து, கருத்து, எண்ணம், ஓர்மை, நினைவாற்றல், நினைவு, உளநிலை, உணர்ச்சி, உணர்வுநிலை, உணர்வு, உயிர்வநலை, ஆன்மா, உயிர்க்கூறு, விருப்பாற்றல். விருப்பம், சிந்தனையாற்றல, சிந்தனை, ஆளும் ஆற்றல், (வினை) மனத்துட் கொள், ஓர், நினைவிற் கொள்,. கவனம் எடுத்துக்கொள்,. அக்கறை எடுத்துக்கொள், முனைந்து ஈடுபடு, சட்டைசெய், பொருட்படுத்து,. விழிப்பாயிரு, பொறுப்பு மேற்கொள்., கருத்துக்கொள்ளுவி.
Minded
a. செய்ய விருப்பமுடைய, மனப்பற்றுடைய, குறிப்பிட்ட மனப்பாங்குடைய இயல்புள்ள.
Mindful
a. சிந்தனையுள்ள, கவனமுள்ள,விழிப்புடைய.
Mind-stuff
n. (மெய்) பருப்பொருளின் மூலமாகக் கருதப்வபடும் கடுநிலை நினைவியல் நுண்ட படிவம்.
Mine
-1 n. சுரங்கம், உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி, வெடிச்சுரங்கம், படைத்துறை அரண் சுரங்கம், வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு, கடற்கண்ணி, அகழ்பீரங்கி, இரும்புக்கனிவளம், மூலவளம், (வினை) நிலத்தில் தோண்டு, நிலத்தின் கீழ் அகழ், சுரங்கை வழ
Mine
-2 pron என்னுடைய, எனது, (பெயரடை) எனக்குரிய, என்னுடைய.