English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Minimum
n. குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான.
Minimus
n. பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல்.
Mining
n. சுரங்கவேலை, சுரங்கத்துறை, (பெயரடை) சுரங்கத்துறை சார்ந்த.
Minion
n. அன்புக்குரிய குழந்தை, மனத்துக்குப் பிடித்த ஏவலர், செல்வமான விலுங்கு (அச்சு) எழுத்துச் சிற்றளவு வகை, மிகச் சிறு அச்செழுத்து.
Minish
v. குறைபடு, ஆற்றல் முதலியவற்றில் குறைவாக்கு.
Minister
n. செயலாற்றுப் பணியாளர், செயலாளர், அமைச்சர், மந்திரி, அரசியல் தூதர், மதகுரு, (வினை) தொண்டாற்று, பணிசெய், உதவியாயிரு, துணையாய் உதவு, கொடு,கொடுத்துதவு, மருந்து வகையில் ஆதரவுடன் கொடு.
Ministerial
a. சட்ட நிறைவேற்றம் சார்ந்த, சட்ட நிறைவேற்ற உதவியான, துணைமையான கருவியான, சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த, அமைச்சர் சார்ந்த, அமைச்சரவையினை ஆதரிக்கிற, அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான.
Ministerialist,
நாளரசினை ஆதரிப்பவர்.
Ministration
n. சமயத் தொண்டாற்றுதல், பணி உதவி,அளிப்புதவி.
Ministry
n. அமைச்சர் தொழில், சமயகுருமார் தொகுதி, அமைச்சர் குழாம், அமைச்சரவை, அரசியல் துறையரங்கம்.
Minium
n. சாதிலிங்கம், இலிங்கக்கல், ஈயச் செந்தூரம்,ஈயச் செந்தூரச் செந்நிறம்,.
Mink
n. அரைகுறையாக நீரில் வாழும கீரியின உயிர்வகை, கீரியின வகையின் மென்மயிர்த்தோல்.
Minnesinger
n. செர்மனியில் 12-14 ஆம் நுற்றாண்டு களில் நிலவிய உயர்குடிக் காதலுணர்ச்சிப் பாடகர் குழு.
Minnie
n. பதுங்குகுழிப் பீரங்கி.
Minnow
n. நன்னீர் வாழ் சிறுமீன் வகை.
Mino
a. மைனாஸ் என்ற அரசனின் பெயரால் வழங்கப்படும் கிரீட் மாநிலசத் தொல்பழங்கால நாகரிகம் சார்ந்த.
Minor
n. வயது வராதவர், 21 அகவைக்குட்பட்டவர், இளம்படியர், சிறுதிறத்தார், சிறுதிற்த்தது, சிறுபடித் துறவி, (அள) சிறுபடிப்பதம்,. (அள) சிறுபடி வசாசம், (பெயரடை) இளம்படியான, சிற்றளவான, (இசை) அளவிற் குறைந்த,சிறுதிறத்துக்குரிய, சிற்றியலான, சி,றதிறமான, சில்லறையான, சிறுபடியான.
Minority
n. இளம்படிநிலை, வயதுவரா நிலை, இருபத்தொரு வயதுக்குக் குறைந்தநிலை, வயதுக்குக் குறைந்தநிலை, வயதுவராப் பருவம், சிறுபான்மையான எண்ணிக்கை சிறுபான்மைப் பகுதி, சிறுபான்மைக் கட்சி, பாதியிற் குறைந்த எண், பெரும்பான்மைக் கட்சிக்,கு எதிரான சிறுபான்மைக் கம்சியினர்கள், சிறுபான்மைக் கட்சியினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், சிறுபான்மைக் கட்சியினரின் வாக்குக் குறைபாடு.
Minotaur, The Minotaur
n. கிரேக்க புராண மரபில் அரைக்குமேலே மனிதனாகவும் அரையின் கீழே காளையாகவும் உள்ள அங்சுவரு வடிவம்.