English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Miocene
n. (மண்) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறு, (பெயரடை) புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காலுக்குரிய.
Mir
n. ருசிய நாட்டுப்புற ஊர்ச் சமுதாயம்.
Miracle
n. தெய்விக அரு நிகழ்ச்சி, அற்புதம், வியத்தகு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க செயல், அருஞ் செய்தி, வியத்தக்க பண்புச் சின்னம்.
Miraculous
a. வியக்கத்தக்க, இயற்கை கடந்த, தெய்விக அரு நிகழ்வான.
Mirage
n. காட்சி மாயம், கானல் நீர், பேய்த்தேர், பொய்த்தோற்றம்.
Mire
n. சதுப்புநிலம், சேறு, தூசி, அழுக்கு, (வினை) சேற்றில் அமிழ்த்து, இக்கட்டுக்களில் தொல்லைகளில் சிக்கவை, கறைப்படுத்து, மாசு சிதறித்தௌத, தூய்மை கெடு, பழித்துரை.
Mirror
n. உருப்பளிங்கு, முகம்பார்க்குங் கண்ணாடி, உண்மையை எடுத்துக்காட்டுவது, பொருளின் மெய்யான விவர விளக்கம், (வினை) கண்ணாடிபோல் நிழலிட்டுக்காட்டு., உரு எடுத்துக்காட்டு.
Mirth
n. களிப்பு, மகிழ்ச்சி, நகைப்பு, சிரிப்பு, வேடிக்கை, ஆரவார இன்பப் பொழுதுபோக்கு, களியாட்டம், கொண்டாட்டம்.
Mirthful
a. மகிழ்ச்சி நிரம்பிய, உவகையளிக்கிற, களிகிளர்ச்சி வாய்ந்த, களிப்புமிக்க.
Mirza
n. இளங்கோ, அரசிளஞ்செல்வர் பட்டம், கோமான், பணித்தலைவர் புலவோர்க்குரிய பட்டம்.
Mis;ery
n. இடும்பை, ஆழ்துயர்நிலை, அவலநி, இரங்கத்தக்க சூழல், கையாறு, சீட்டாட்டத்தில் எந்தப் பிடியும் பிடிப்பதில்லை என்ற அறிவிப்பு.
Misa
n. அப்பிரகம், காக்காய்ப் பொன்.
Misadventure
n. அவகேடு, கெடுநிகழ்ச்சி, இடையூறு., பேரிடர்ப்பாடு, தற்செயற் கொலைநேர்ச்சி.
Misalliance n.
தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு, பொருந்தாத் திருமணம்.
Misanthrope, n,.
மனித இனத்தை வெறுப்பவர், மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர்.
Misanthropic, misanthropica
a. மனித இனத்தை வெறுக்கிற, மனித இனத்தில் நம்பிக்கையற்ற.
Misanthropy
n. மனித இன வெறுப்பு, மனித இனம்பற்றிய நம்பிக்கைக்கேடு.
Misapplication
n. கெடுவழக்கு, தவறான காரியத்துக்கு வழங்குதல், நிதியைத தவறாகப் பயன்படுத்துதல்.
Misapply
v. தவறாகச் செயற்படுத்து, தவறாக வழங்.கு.