English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Moleskins
n. pl. இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை.
Molest
v. தொந்தரவுகொடு, தலையிட்டுத் தொல்லையளி.
Molestation
n. நச்சரிப்பு, தொல்லை.
Molinism
n. அருளொப்படைப்புக் கோட்பாடு, முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு.
Moll
n. பரத்தை, வலைமகள், சதிக்குழுவின் காமக்கிழத்தி.
Mollify
v. கனிவி, இளக்கு, மென்மையாக்கு.
Mollusc
n. (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று.
Molly
n. பெண்ணியல்பு மிக்கவன், கையாலாகாதவன், எழுச்சியற்றவன்.
Molly-coddle
n. பெண்ணியல்பு மிக்கவன், (வினை) சீராட்டு, நோயாளியெனக் கருதி நடத்து.
Moloch
n. குழந்தைகள் பலியிடப்பெற்ற செமிடிக் கடவுள் சிலை, முட்களையுடைய ஆஸ்திரேலிய பல்லியின விலங்குவகை.
Molossus
n. மூன்று நெடிலசைகள் கொண்ட செய்யுளடி.
Molten a.
உருக்கி வார்க்கப்பட்ட.
Moly
n. வியத்தக்க ஆற்றல் வாய்ந்ததாகக் கருத்ப்படும் கற்பனைப்பூண்டு, வௌளைப் பூண்டினச் செடிவகை.
Molybdenum
n. முறிவௌளி, தகர்வியல்புடைய வௌளி நிறம் வாய்ந்த உலோக வகை.
Moment
n. கணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன்.
Momentary
a. கணநேரமே உள்ள, சுருங்கிய வாழ்வுள்ள, நிலையில்லாத.
Momently
adv. கணத்துக்குக் கணமாக, கணந்தோறும், கணநேரத்துக்கு.
Momentum
n. (இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
Momentuous
a. பெருஞ் சிறப்பு வாய்ந்த, பெருவிளைவுகளை உண்டாக்கவல்ல.