English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Momus
n. கிரேக்க புராண மரபில் ஏளனத்தெய்வம், குற்றங்காண்பவர்.
Monacal, monachal
துறவிமடஞ் சார்ந்த.
Monad
n. ஒருமை, ஒருமைநிலை, (மெய்) முடிநிலை ஒருமை, (உயி) கற்பனை மூலஉயிரணு,. (வேதி) ஓரிணை திறத்தனிமம், நீரகத்தின் ஓரணுவுடன் இணையும் ஆற்றலுடைய தனம வகை.
Monadelphous
a. (தாவ) ஒரே மலரிழையுடைய.
Monandrous
a. (தாவ) ஒரே மலரிழையுடைய.
Monandry
n. ஓருசமயத்தில் ஒரே கணவரை மேற்கொள்ளும் வழக்கம்.
Monarch
n. ஆளுநர், முடிமன்னர், எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர்,. அரசன், அரசி, பேரரசன், பேரரசி, சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை.
Monarchal, monarchic, monarchical
முடியரசு சார்ந்த, முடிமன்னருக்குரிய.
Monarchism,
முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று.
Monarchist
n. முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர்.
Monarchy
n. முடியரசு, முடியாட்சி, முடியாட்சி நாடு.
Monastery
n. துறவிமடம்., சமய நோன்பினர் வாழிடம்.
Monastic
a. துறவிகளுக்குரிய, துறவிமடங்கள் சார்ந்த, புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
Mondaine
n. நவநாகரிகப் பெண், இன்பநாட்டமுள்ள பெண்.
Mondayish
a. சமயகுருமார் வகையில் ஞாயிற்றுக்கிழமை வேலையினால் களைப்புற்ற., மற்றவர் வகையில் ஞாயிறு,. விடுமுறையினால் வேலையார்வமற்ற.
Monde
n. நவநாகரிக உலகு, நாகரிகச் சமுதாயம், பழுகுஞ் சமூகச்சூழல்.
Monetary
a. நாணயமுறைக்குரிய, பணம் சார்ந்த.
Monetize
v. நாணயமாக வழங்கவிடு, பணமாகச் செலாவணிப்படுத்து.