English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Morass
n. (செய்) படுவம், சதுப்புநிலம்.
Morat
n. (வர) முசுக்கட்டை மர வகையின் பழங்களால் சுவையும் மணமுமூட்டப்பட்ட தேன்கலந்த குடிவகை.
Moratorium
n. கடன் தவணை உரிமை, கடன்களைக் காலந்தாழ்த்திக் கொடுப்பதறட்கான சட்ட இசைவு.
Moravian
n. மொரேவியா நாட்டினர், முனைத்த சீர்திருத்த சமயக்கிளைக் குழுவினர், (பெயரடை) மொரேவியா நாட்டுக்குரிய, முனைத்த சமயக்கிளை வகைக்குரிய.
Morbid
a. பிணி இயல்புடைய, நாய் சார்ந்த, நோய்நிலையுடைய, கோளாறான, மனநிலை திரிந்த, எண்ணங்களின் வகையில் தீமையிலேயே ஈடுபடுகிற.
Morbidezza
n. ஓவிய வகையில் தசைவண்ண உயிர்த்தோற்ற ஓவியம்.
Morbidity
n. நோயுற்றநிலை, நோயுற்ற அளவு, நோய் நிலை வீதம், மாவட்டத்தில் நோய் பரவிய நிலை.
Morbific
a. நோய் உண்டாக்குகிற.
Morceau
n. சிறிய இலக்கியக் கட்டுரை, சிறிய இசைப்பாடல்.
Mordant
n. அரிகாரம், அரிப்பாற்றலுடைய காடி, நிறம் கெட்டியாக்கும் சரக்கு, தங்கத்தாள் உறைக்கவைக்கும் பொருள், (பெயரடை) அரிப்பாற்றலுடைய, அரித்துத்தின்கிற, அரித்துத் தூய்மைப்படுத்துகிற, காரமான, எரிச்சலுட்டுகிற, சாயவகையில் கெட்டிப்படுத்துகிற, தங்கத்தாள் வகையில் உறைக்கவைக்கிற.
Mordent
n. (இசை) கீழ் அயல் நரம்பூட்டிய இசைப்பாட்டு வகை.
More
a. விஞ்சி மிகையளவான, உறழ்படியில் மிகுதியான, எண்ணிக்கையுடைய, இன்னுங் கூடதலான, (வினையடை) விஞ்சி மிகுதியாக, இன்னும் மேலும், பின்னும்.
Moreen
n. திரைச்சீலைக்குப் பயன்படும் கம்பளி அழுததமான பருத்தி கலந்த துணிவகை.
Morel
-2 n. உண்ணத்தக்க காளான் வகை.
Morel,
-1 n. வெண்ணிற மலர்களும் நச்சுத்தன்மை கொண்ட கருநிறப் பழங்களுமுடைய செடிவகை.
Morello
n. கசப்புடைய கனிவகை.
Moreover
adv. மேலும், இஃதன்றியும், இன்னும்.
Moresque
a. வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியரின் பாணியிலமைந்துள்ள, வடமேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமியர் பாணிக்குரிய வேலைப்பாடுடை.ய.
Morganatic
a. திருமண வகையில் உயர்நிலையிலுள்ள ஆணுக்கும் தாழ்நிலையிலுள்ள பெண்ணுக்கும் இடையே நிகழ்கிற.
Morgue
-1 n. பிண அடையாளத்தேர்வு மனை, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம், பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை.