English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Moose
n. கடமான் வகை, வட அமெரிக்க மானியல் விலங்கு வகை.
Moot
n. (வர) குழு, ஆயம், கூட்டம், சட்டமாணவர் பயிற்சி வழக்குவாதம், (பெயரடை) வாதத்திற்குரிய, (வினை) விவாதத்திற்கான கேள்வியை எழுப்பு.
Mop
-1 n. துடைப்பக் கந்தற்கிழி, விளக்குமாற்றுக் குஞ்சம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு, கண்ணீர் துடை, வியர்வை ஒத்தி அகற்று, எதிரி வீரர்களைச் சிறைசெய்து அகற்று, எதிரி வீரர்களைக் கொண்றேழி, எதிரிப்படை ஒழித்து நிலம் கைப்பற்று.
Mop
-2 n. வேலையாட்களும் வயற் கூலியாட்களும தேர்ந்து கொள்வதற்குப் பயன்படும் இலையுதிர்காலச் சந்தை.
Mop
-3 v. அழகுகாட்டு, கோட்டி காட்டு.
Mope
n. மடியர், கிளர்ச்சியற்றவர், (வினை) சோர்வுற்றிரு, கிளர்ச்சியற்றிரு, மடியராயிரு.
Moped
n. உந்தமைவுடைய மிதிவண்டி.
Mophead
n. கூடைபோன்று கவிந்துள்ள பரட்டைத்தலை, பரட்டைத்தலையன்.
Mopoke
n. ஆந்தை வகை, பறவை வகை.
Moptor-car
n. மோட்டார், உலா விசை உந்துவண்டி.
Moquette n.
கம்பளி மென்சணல்நார்க் கலவைத்துணி வகை.
Mora, morra n.
காட்டும் விரல் எண்ணிக்கையைக் காட்டும் போதே கூறம இத்தாலிய விளையாட்டுவகை.
Moraine
n. பனிப்படல வண்டல்.
Moral
n. படிப்பினை, உள்ளுறைநீதி, கதைகாட்டும் நெறிமுறை, நிகழ்ச்சிதரும் போதனை, ஒழுக்கத் தத்துவம், (பெயரடை) அறமுறையான, நேர்மையுணர்வுக்கரிய, நீதிக்குரிய, நீதி முறைக்குக் கட்டுப்பட்ட, நடததைச்சார்பான, பால்வகை ஒழுக்கஞ் சார்ந்த, நன்மை தீமையுணர்வுக்குரிய, இலக்கிய வகையில் கலை நேர்மை சார்ந்த, பண்புறுப்புக்களின் இயைவுறழ்வு சார்ந்த.
Morale
n. ஒழுங்குணர்வு, படைவீரர் வகையில் கட்டுப்பாட்டமைதி.
Moralism
n. அழுக்கமுறைமை, நன்னடத்தை இயல்பு, ஒழுக்கநிலைச் சமய வாழ்வு.
Moralist
n. அறவோர், ஒழுக்கமுறை போதிப்பவர், நன்னடத்தையாளர், ஒழுக்கத் தற்பெருமையாளர், வெற்றொழுக்கவாதி, சமயவாழ்வில் ஒழுக்கமுறையினை மட்டும் மேற்கொள்பவர்.
Morality
n. அறநுல், நீதிமுறைமை, நன்னடத்தை, நடத்தை, ஒழுக்கப்பண்பு, (வர) முற்காலப் பண்பியல் நாடகம்.
Moralize
v. நீதிநெறி ஆய்வு செய், நெறிமுறை பயில், நீதி காட்டு, ஒழுக்கமுறைச் சார்பாகப் பொருட்படுத்து, நன்னெறிக்காட்டு, நடை சீர்ப்படுத்து.
Morals, n. pl.
பழக்க நடைமுறைகள், பால்வகை நடத்தை.