English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Moth-ball
n. அந்துருண்டை, கப்பலில்ர துப்பாக்கிச் சட்டம் இயந்திரம் முதலியவற்றைத் தூவு திவலைமூலம் இடும் கால்புகாக் குழைமக்காப்பீடு.
Moth-eaten
a. அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பட்ட, காலங்கடந்த, பழமைப்பட்டுப்போன.
Mother
-1 n. தாய், அன்னை, தோற்றமூலம், தோற்றுவாய், கன்னிமாடத் தலைவி, தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு, கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு, (வினை) பெறு, பிறப்பி, தோற்றுவி, தாயைப்போல் பேணி வளர், பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள், பிள்ளையென வௌதப்ப
Mother(2), motherof vinegar,
n. புளிக்காடியில் உண்டாகும் பிசின்போன்ற பொருள்.
Mother-Church
n. கிளைச்சபைகள் தோற்றுவித்த தாய்த்திருச்சபை.
Mother-craft
n. தாய்மைத்திறன், குழந்தை வளர்ப்புத் திறன்.
Mother-in-law
n. மாமியார், கணவனின் தாய், மனைவியின் தாய்.
Motherland
n. தாயகம், தாய்நாடு.
Motherly
a. தாய்மைக்குணமுடைய, தாயின் நற்பண்புகள் வாய்ந்த, தாயின் நற்குணங்களைக் காட்டுகின்ற.
Motif
n. கலைப்பண்புக்கூறு, கலைத்துறையில் முனைத்த கருத்து, தனியே கைத்திணைக்கப்படும் பூவணி வேலை.
Motile
a. (உயி.,தாவ) இயங்கியலான, அசையும் தன்மையுடைய.
Motion
n. அசைவு, இயக்கம், இயங்குமுறை, இயங்கு நிலை,இடமாற்றம், நுண்பெயர்ச்சி, நிலைமாற்றம், சாடை வைகை, இயங்குபாணி, இயக்க ஆற்றல், இயக்கும் மனவெழுச்சி, உணர்ச்சி, திடீர்விசை, தூண்டுதல் விசை, இயந்திரரப்பகுதி, வயிற்றுப்போக்கு, மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை, முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை, (வினை) சாடைகாட்டித் தெரிவி, சைகைமூலஞ்ட செயல் தூண்டு, சாடைமூலம் ஏவு, தீர்மானக் கட்டளைமுறை கொணர், ஆலோசனை கூற.
Motivate
v. செயல் நோக்கமளி, செயல்நோக்கங் கற்பி, செயல் நோக்கமாயிரு, சிறப்புக் கூறாயமை.
Motive
-1 n. செயல்நோக்கம், செயல் தூண்டுதலுணர்ச்சி, உட்கொள், உட்கருத்து, உள்ளெண்ணம், சிறப்புக்கூறு, உட்கூறு, (பெயரடை) இயக்கத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடைய, இயக்கஞ் சார்ந்த.
Motley
n. கதம்பத்திரள், பொருத்தமற்ற கலவைக்கூளம், (வர) கோமாளியின் பல்வண்ண உடை, (பெயரடை) பல்வண்ணமுடைய, பல்வகை நிறமுடைய, பலதிறப்பட்ட, பல்வேறுபட்ட.
Motor
n. விசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல்.
Motorcycle
விசையுந்து, மிதியுந்து
Motorize
v. விசை உந்து வாய்ப்புக்களை உடனிணைத்தமை.
Mottle
n. பல்வண்ணப் புள்ளயமைவு, அடைதிரள்வண்ணம்., சுட்டி, வண்ணப்பட்டை., பல்வண்ணக். கம்பளி இழை, (வினை) பல்வண்ணப் புள்ளிகளிடு.
Mottled
a. பல்வண்ணப்புள்ளிகள் வாய்ந்த, அடைதிரள் வண்ணம் உடைய.