English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Motto
n. மேற்கோள் உரை, கடைப்பிடிக்கும் பொன்மொழி,,முகப்பு மேற்கோள் வாசகம், இசைப்பல்லவி, வாணவெடி மூலம் காட்டப்படும் விளம்பர வாசகம்.
Moue
n. உதட்டுப் பிதுக்கம்.
Moufflon
n. தென் ஐரோப்பிய மலையாடு வகை.
Moujik
n. ருசிய நாட்டுக் குடியானவர், பெண்டிரின் தளர்த்தியான கம்பளிக் குல்லாய்.
Mould
-1 n. மாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக
Mould
-2 n. புழுதி மண், பசளை மண், உழுத நிலத்தின் உதிர் மண்பரப்பு.
Mould
-3 n. பூஞ்சக்காளான்.
Mould-board
n. உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் முனைப்பலகை.
Moulder
-1 n. வார்ப்படஞ் செய்பவர், உரு அச்சில் வார்ப்பவர்.
Moulder
-2 v. பொடியாகு, மண்ணாகு, உளுத்துப்போ, இற்றுவிடு.
Mouldiness
n. உளுத்தநிலை, பூஞ்சைப்பிரிவு.
Moulding
n. வார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு.
Moulding works
வார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள்
Moulding-board
n. அப்பமாவு பிசையும் பலகை.
Mould-loft
n. கப்பலின் முழு அளவு மாதிரிப்படம் வரையப்பட்ட தளமுள்ள அறை.
Moult,.n.
இறகுதிர்ப்பு, இறகுதிர்செயல், இறகுதிர்ப்பு முறை, இறகுதிர்ப்புப் பருவம், (வினை) சிறகுதிர், சிறகினை உதிர், சிறகுதிர்க்கப்பெறு, சிறகுவகையில் உதிர்க்கப்பெறு.
Mound
-1 n. மணிமுடி முகட்டுக்கோளம், நிலவுலகத்தைக் குறிக்கும் மணிமடிப்பொற்பந்து.
Mound
-2 n. திடல், மேடு, மண்மேடு, பிணக்குழிமேடு, பொற்றை, சிறுகுன்று, (வினை) மண்மேடுகளால் சூழவை, மண்மேடகளாகக் கவி.
Mound-builder
n. மண் மேடெழுப்பும் வரலாற்றுக்கு முற்பட்ட வட அமெரிக்க இந்திய இனத்தவர், வட அமெரிக்க இந்திய இனத்தில் ஒருவர், முட்டைகளைக் குவியலாக அடுக்கும் பறவை வகை.
Mouner
n. இழவு கொண்டாடி, கூலித்துயர்க் கொண்டாட்டக்காரர்.