English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Panegyrize
v. புகழ்ந்து பேசு, பாராட்டியெழுது.
Panel
n. சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Pang
n. கடும்வேதனை, இனைவு, சுரீரென்ற நோவு.
Pangamy
n. திடீர்ப்புணர்ச்சி, திடீர்த்திருமணம்
Pan-genesis
n. உறுப்புமரபுக் கோட்பாடு, உயிர்ப்பொருளின் ஒவ்வொரு கூறம் தன்னினம் பெருக்கிக்கொள்கிறதென்னுங் கொள்கை.
Pan-German
a. அரசியல் கூட்டமைப்பிலுள்ள செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த, செர்மானியர் அனைவரையுஞ் சார்ந்த.
Pangolin
n. எறும்புண்ணும் விலங்குவகை.
Pan-Hellensim
n. கிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு.
Panic
-1 n. இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
Panic
-2 n. கிலி, திகில், பீதி, கூட்டத்திற் பரவி ஆட்கொள்ளும் கலவர உணர்ச்சி, அவசரச் செயல்களைத் தூண்டும் திடீர் அச்சம், அச்சத்தால் ஏற்படும் தன்வயமற்ற மருட்சிநிலை, (பெ.) அச்ச வகையில் ஆதாரமற்ற, மட்டுக்கு மிஞ்சிய, (வினை.) திகிலுட்டு, திகிலடை.
Panicky
a. திகில் விளைக்கிற, கிலிகொண்ட.
Panicle
n. (தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி.
Panic-monger
n. திகில் பரப்புபஹ்ர், பீதியுண்டாக்குபவர்.
Panification
n. பொங்கப்பம் செய்தல், ரொட்டிப் புனைவு.
PanIslam
n. இஸ்லாமிய உலகத்தின் கூட்டு, இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம், இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
Panjandrum
n. கற்பனை வீரத்திருமகன்.
Panlogism
n. இயலுலகு மூலதத்துவத்தின் வௌதப்பாடே என்ற கோட்பாடு.
Panlogistic
a. ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
Pannage
n. பன்றி பொறுக்கலுண்டி, நாடுகளிற் பன்றி மேய்ப்புரிமை
Panne
n. உடுப்புக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட துய்களையுடைய மென் துணி வகை.