English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pomato
n. உருளைத் தக்காளி.
Pombe
n. ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை.
Pome
n. (தாவ.) ஆப்பிள் போலி, (செய்.) ஆப்பிள், உலோகக் குண்டு.
Pomegranate
n. மாதுளம்பழம், மாதுளை மரம்.
Pomelo
n. சிறு கிச்சிலிப் பழவகை, கொடிமுந்திரிப்பழம்.
Pomeranian
n. குச்சுக் சடைநாய் வகை, பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை, (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.
Pomfret
n. உணவு மீன்வகை, இனிய அப்ப வகை.
Pomiculture
n. பழவளர்ப்புத்துறை, பழப்பண்ணைத் தொழில்.
Pomiferous
a. கனி தருகிற.
Pommel
n. கலணைக்கரடு, சேணத்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம், கத்தியின் கைப்பிடிக் குமிழ்,(வினை.) மொத்து, குமிழ்ப்புறத்தால் அடி, முட்டிகளால் குத்து.
Pomology
n. பழவளர்ப்பு நுல்.
Pomona
n. பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை.
Pomp
n. பகட்டாரவாரம், ஆடம்பரம், ஆகுலம்.
Pompadour
n. பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி, (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோ ர் அரசிக்குரிய, கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோ ர் அரசிக்குரிய.
Pompano
n. வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை.
Pompier, pompier ladder
n. தீயணைப்போர் ஏணி.
Pom-pom
n. (பே-வ.) இயந்திரப் பீரங்கி.
Pompon
n. கூந்தல் திருகணி, பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம், போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம்.
Pomposity
n. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை.
Pompous
a. பகட்டாரவாரமான, பகட்டழகுடைய, தோற்றச் சிறப்பு வாய்ந்த, தற்பெருமையுள்ள, மொழிவகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.