English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ponceau
n. ஔதர் சிவப்பு நிறம்.
Poncho
n. தென் அமெரிக்க மேலாடை, தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம், தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம்.
Pond
n. குட்டை, குளம், சிறு செய்குளம், (வினை.) அணைகட்டி நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்து, நீரோட்டத்திற்கு அணைபோடு, நீர்நிலை வகையில் குளமாக அமைவுறு, குட்டையாகத் தேங்கு.
Pondage
n. குளத்து நீரின் கொள்ளளவு, நீர்த்தேக்கம்.
Ponder
v. நீளநினை, தீர எண்ணிப்பார்.
Ponderable
a. கணிசன்ன எடையுடைய.
Ponderation
n. எடையீடு, நிறுத்துப்பார்த்தல், சமநிலைப் படுதல்.
Ponderous
a. பளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற.
Pond-life
n. குட்டை வாழுயிரி, குளங்குட்டைகளில் வாழும் தண்டிலி உயிரினத் தொகுதி.
Pondweed
n. நிலை நீர்ப் பூண்டு.
Pone
-2 n. மக்காச் சோள அப்பம், அமெரிக்க இந்தியர்கள் செய்யுஞ் சோள அப்பம், பால்-முட்டை முதலியன சேர்த்துச் செய்யப்படும் நேர்த்தியான அப்ப வகை, நேர்த்தியான அப்பவகையின் முழுப்பாளம், நேர்த்தியான அப்பவகையின் அரைப்பாளம்.
Pone
-1 n. சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரர், சீட்டாட்ட வகைகளில் முதல் ஆட்டக்காரரின் கூட்டாளி.
Pongee
-1 n. மென்பட்டு, நேரியற் பருத்தி.
Pongo
n. மனிதக்குருங்கு வகை, வாலில்லாக்குரங்கு.
Poniard
n. குத்துவாள், உடைவாள், (வினை.) உடைவாளினாற் குத்து.
Pons
n. (உள்.) பாலம், மூளையின் இருபாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை.
Pontifex
n. பண்டைய ரோம் நகரில் சமய குருமார்களின் முதன்மைக் குழுவின் உறுப்பினர், போப்பாண்டவர்.
Pontiff
n. மேற்றிராணியார், மாவட்டச்சமய முதல்வர், முதன்மைப் புரோகிதர், தலைமைக்குரு, தேசிகர்.
Pontifical
n. மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி, (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த, தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த.
Pontificals
n. pl. விருதணி, மாவட்டச் சமய முதல்வரின் உடுப்புக்கள்-விருதுகள்-சின்னங்கள் ஆகியவை