English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pontificate
-1 n. சமயகுருமார்களின் முதன்மைக்குழுவின் உறுப்பினருடைய பதவி, மாவட்டச் சமய முதல்வருடைய பதவி, போப்பாண்டவருடைய பதவி, போப்பாண்டவர் பதவிக்காலம்.
Pontify
v. தலைமைக்குருமார் குழு உறுப்பினராகச் செயலாற்று, மாவட்டச் சமயத் தலைவராகச் செயலாற்று, போப்பாண்டவராசச் செயலாற்று, தவறிழைக்காதவரெனக் கூறிக்கொள்.
Pont-levis
n. தூக்குப்பாலம், கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம்.
Pontoneer, pontonier
தட்டைப் படகுப் பொறுப்பாளர், படகுப்பாலங் கட்டுபவர்.
Pontoon
-2 n. யோகச் சீட்டாட்ட வகை.
Pontoon
-1 n. சலங்கு, தட்டைப்படகு, தோணிப்பாலம், நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை, படகுருவான துறைமுகவாயிற் கதவம், விமானத்தெப்பம், தெப்பம், (வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல்.
Pood
n. 36 பவுண்டுள்ள ருசிய எடையளவு.
Poodle
n. சடை நாய், பலவகையில் வேடிக்கையாகக் கத்தரிக்கப்ட்டு ஆர்வத்துடன் வளர்க்கப்படும் நீண்ட சுருள் மயிரினை உடைய சடைநாய் வகை, (வினை.) சடைநாயின் மயிரை அழகுக்காகக் கத்தரித்து ஒழுங்குபடுத்து.
Pooh
int. சீஸ், பொறுமையின்மைக் குறிப்பு, வெறுப்பொலிக் குறிப்பு.
Pooh-Bah
n. பல பதவியாளர்.
Pooka
n. கூளி, சிறுதெய்வம்.
Pookoo
n. தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த சிவப்பு மான் வகை.
Pool
-2 n. பொதுநிதி, பொதுச்சேர்மம், பொது மேசைப் பணம், சீட்டாட்ட வகையில் பந்தயப் பணம்-தண்டப்பணம் ஆகியவற்றின் மொத்தம், பொது மேசைப்பணச் சேமக்கலம், மேடைக் கோற்பந்தாட்ட வகை, கூட்டுச் சூதாட்ட முயற்சி, கூட்டுச் சூதாட்டப் பந்தயங்களின் மொத்தம், வாணிகக் கூட்டிணைப்பு, போ
Pool
-1 n. இயற்கையாயமைந்த சிறுகுளம், அமைந்த நீர்நிலை, கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம், மடு, ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி, (வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய், நிலக்கரி வகையில் கீழறு, சுரங்கமறு.
Poonah brush
n. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
Poonah painting
n. பூனா ஓவியப்பாணி.