English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Popedom
n. போப்பாண்டவர் பதவி, போப்பாண்டவர் பணிமதிப்பு, போப்பாண்டவர் ஆட்சியெல்லை, போப்பாண்டவர் பதவிக்காலம்.
Popery
n. ரோமன் கத்தோலிக்க சமயம், ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் அமைந்த சமயமுறை.
Popgun
n. பொம்மைத் துப்பாக்கி, பயனற்ற சுடுபடைக்கலம்.
Popish
a. போப்பாண்டவர் சமயமுறைமை சார்ந்த, போப்பணர்டவரிக்குரிய.
Poplar
n. நெட்டிலிங்க மரவகை.
Poplarism
n. இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை, வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
Poplin
n. பட்டியல் பருத்தித் துணி வகை.
Popliteal
a. துடையின் பிற்பகுதி சார்ந்த, முழங்காலின் பின்னாலுள்ள குழிவுக்குரிய.
Poppet
n. குஞ்சு-குழந்தைபற்றிய ஆர்வச்சொல், கடைசற்பொறியின் தலைப்பாகம், கப்பலைப் புறப்படுத்தப் பயன்படும் சிறுமரத்துண்டு, உயரத்தூக்குவதில் பயன்படும் கயிற்றுக் கப்பிகளைத் தாங்கஞ் சட்டம்.
Poppet-head
n. கடைசற் பொறியின் தலைப்பகுதி.
Popping
n. வெடிப்பொலி எழுப்புதல், துப்பாக்கி வெடி தீர்த்தல், பொருளைத் திடுமென வைத்தல், விரைந்தியக்குதல்.
Popping-crease
n. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு.
Popple
n. நீர் அலை திரைவு, நீரலை உருட்சி, மெல்லிய நீர்த்துரை, (வினை.) அலைவகையில் உருண்டோ டு, முன்னும் பின்னும் அலைபாய்.
Poppy
n. காசகசாச்செடி, மயக்கமூட்டும் பாற்சாற்றினையுடைய செடிவகை.
Poppy-head
n. கசகசாச் செடியின் விதையுறை, திருக்கோயில் இருக்கை முனையின் ஒப்பனை முகடு.
Popshop
n. அடைமான வட்டிக்கடை.
Popsy, popsy-wopsy
n. 'கிளி' போன்ற ஆர்வமொழி, சிறுபெண்.
Populace
n. பஞ்ஞிலம், பொதுமக்கள் திரள்.
Popular
a. மக்கள் பாராட்டிற்குரிய, பொதுமக்கள் சார்ந்த, பொதுமக்களால் நடத்தப்படுகிற, பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட, மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட, மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட, பொதும்மக்களிடையே வழங்குகிற.
Popularity
n. பொதுமக்களிடை மதிப்பு, பொதுமக்கள் விரும்பும் நிலை.