English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Popularize
v. பாமரர்க்குரியதாக்கு, மக்கள் விரும்பும்படி செய், வாக்குரிமை முதலியவற்றைப் பொதுமக்களிடையே வழங்கு, தொழில் நுணுக்கப் பொருள் முதலியவற்றை எல்லாரும் விரும்பும் வடிவத்தில் எடுத்துச்சொல், யாவரும் விரும்பும் முறையில் எழுது.
Population
n. மக்கட்டொகை, குடியேற்றச் செயல்.
Populist
n. குடிப்பொதுமைக் கட்சியினர், இருப்பூர் திகள்-படித்தர வருமான வரி முதலியவற்றை அரசினர் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அரசியல்கட்சி உறுப்பினர், கூட்டாண்மையை ஆதரிக்கும் ருசிய அரசியல் கட்சி உறுப்பினர்.
Populous
a. குடிநெருக்கான, மக்கள் நிறைந்த.
Porbeagle
n. சுறாமீன் வகை.
Porcelain
n. மங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான.
Porcelainize
v. பீங்கானாகச் சுடு.
Porcelainours, porcellaneous
a. பீங்கான் போன்ற.
Porch
n. புகுமுக மண்டபம், மூடு முன்றில்.
Porcine
a. பன்றிக்குரிய, பன்றிபோன்ற.
Porcupine
n. எய்ப்பன்றி, முள்ளம்பன்றி, சிக்குவாரி, சணல் கோதுங் கருவி, (பெ.) முள்ளம்பன்றி போன்ற.
Pore
-1 n. நுண்துளை, மயிர்க்கண்.
Pore
-2 v. கருத்தூன்றிப்பார், படிப்பதில் ஆழ்ந்திரு, நீளநினை, ஒன்றிலிருந்து நினை.
Porge
v. யூதர் சமயவினைமுறை வகையில் கொல்லப்பட்ட விலங்கின் தசைநார் முதலியவற்றை அகற்றித் தூய்மையுடையதாக்கு.
Porism
n. (கண.) கிளைத்தோற்றம், (அள.) பன்முகப் பலகோள், விடை தீர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நிலை தரும் முற்கோள்.
Pork-butcher
n. விலைப்பொருட்டுப் பன்றி கொல்வார்.