English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Poonah paper
n. பூனா ஓவியத்தாள், கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
Poon-oil
n. புன்னை எண்ணெய்.
Poop
-1 n. கப்பலின் பிற்பகுதி, கப்பலின் பின்கோடி மேடைத்தளம், (வினை.) அலை வகையில் கப்பலின் பின்பகுதியின் மேல்மோது, கப்பல்வகையில் பிற்பகுதியின் மேல் அலைமோதப் பெறு.
Pooped
a. கப்பல் வகையில் பின்கோடி மேடைத்தளமுடைய.
Poor
a. வறிய, ஏழ்மையான, வளமற்ற, குறைபாடுடைய, மண் வகையில் விளையாத, குறைவாயுள்ள, போதாத, எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற, இழிவான, அற்பமாமன, எழுச்சியற்ற, ஊக்கங்குறைந்த, வெறுக்கத்தக்க, தாழமையுள்ள, பொருட்படுத்த வேண்டியிராத, இரங்கத்தக்க, நற்பேறற்ற, நலக்கேடான.
Poor-box
n. தரும உண்டி, ஏழையர் உதவிநிதிப்பெட்டி.
Poor-house
n. ஆதுலர் சாலை, ஏழையர் விடுதி.
Poor-law
n. ஏழையர் உதவிமுறைச்சட்டம், இரவலர் சட்டம்.
Poorly
a. உடல்நலமற்ற, நலக்கேடான, (வினையடை.) பற்றாக்குறையாக, போதாமல், குறைபாட்டுடன், முழுவெற்றியின்றி, இழிவாக, வெறுக்கத்தக்க வகையில.
Poorness
n. குறையுடைமை, குறைபாடு.
Poor-rate
n. அற வரி, ஏழைகளின் உதவிக்காக விதிக்கப்படும் வரி.
Poor-spirited
a. ஊக்கமற்ற, கோழையான, உரமற்ற, எதற்கும் அஞ்சுகிற.
Pop
-1 n. திடீரென்ற வெடிப்பொலி, ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு, (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை, (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு, புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய்,
Pop
-2 n. (பே-வ) பொதுவிருப்பமான இசையரங்கு.
Pop
-3 n. ஈட்டன் கல்விநிலையத்தில் உள்ள பொழுது போக்கு-சொற்போர்க் கழகம்.
Popcorn
n. மக்காச்சோளப் பொரி, மக்காச்சோள வகை.
Pope
-1 n. போப்பாண்டவர், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், குறைவற்ற முழுநிறைவானவராகக் கூறிக்கொள்பவர், முழுநிறைவானவரெனக் கருதப்பெறுபஹ்ர்.
Pope
-2 n. ருசியா முதலிய நாடுகளின் கிரேக்கர் திருச்சபையின் வட்டகைக் கோயிற்குரு.
Pope
-3 n. துடையின் பொறித்தடம், அடித்தால் பொறுக்க முடியாத நோவு அல்லது மயக்கந்தரும் துடைப்பகுதி, (வினை.) துடையின் பொறித்தடத்தில் அடி.