English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Porker
n. இறைச்சிப் பன்றி, கொழுத்த ஆண்பன்றிக்குட்டி.
Porkling
n. சிறுபன்றி, பன்றிக்குட்டி.
Pork-pie
n. கொத்திய பன்றியிறைச்சி வேவல்.
Porky
a. பன்றியிறைச்சி சார்ந்த, பன்றியிறைச்சி போன்ற, (பே-வ) சதைப்பற்றுள்ள, கொழுத்த.
Pornocracy
n. விலை மகளிர், செல்வாக்காட்சி.
Pornography
n. பரத்தையர் வருணனை, இழிபொருள் ஓவியம், இழிபொருள் இலக்கியம்.
Poroplastic
a. அறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட.
Porous
a. நுண்துளைகளையுடைய.
Porphyry
n. வெண்ணீலப் பாறைவகை.
Porpoise
n. கடற்பன்றி வகை.
Porraceous
a. வெங்காயப் பச்சையான.
Porrect
v. (வில.) உறுப்பை முன்னுற நீட்டு, திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
Porrigo
n. (மரு.) தலைப்பொடுகு.
Porringer
n. வட்டில், குழந்தைகளின் சிறு உணவுத் தட்டு.
Port
-1 n. துறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
Port
-2 n. நகரக் கோட்டைவாயில், (கப்.) கப்பல் பக்கப்புழைவாய், துப்பாக்கி வாய் வழிப்புழை, காலதர், காற்றுப்புழை,(இயந்.) ஆவி-நீர் முதலியன செல்வதற்கான துளைவாய், கடிவான இரும்பிலை குதிரையின் நாக்கிற்காக வளைத்த பகுதி.
Port
-3 n. நடைத்திறன், நடைப்பாங்கு, (படை.) படைக்கலம் சாய்ததேந்தித் தாங்கிச் செல்லும் நிலை, (வினை.) துப்பாக்கி முதலிய படைக்கலங்களைக் குக்ஷ்ல் மேலிருக்கும்படியான இடது தோளிற் சாய்ந்து ஏந்து.
Port
-4 n. (கப்.) கப்பலின் இடதுபக்கம், (பெ.) இடதுபக்கமான, (வினை.) கப்பலை இடதுபக்கமாகத் திருப்பு, கப்பல் வகையில் இடது பக்கமாகத் திரும்பு.
Port
-5 n. போர்ச்சுகல் திராட்சைத் தேறல்.