English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pedagogy
n. ஆசிரியரியல், போதனை முறை.
Pedal
n. நெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு.
Pedant
n. கல்விச் செருக்குடையவர், புத்தகப் படிப்பாளர், கோட்பாட்டு வெறியர், நுல் விதிமுறை வெறியர்.
Pedantic
a. கல்விச் செருக்குடைய, விதிகண்டிப்பான, எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற, புலமைப்பாணி விடாத.
Pedantize
v. கல்விச் செருக்குடன் நட, புலமைப்பாணியிற் செயலாற்று, புலமைப் பகட்டாளராக்கு.
Pedantocracy
n. ஆசிரியபுரட்சி.
Pedantry
n. பகட்டு நுலறிவு, புலமைக் கண்டிப்பு, பகட்டாரவாரச் சொற்றொடர், குருட்டுக் கோட்பாடு வெறி.
Pedate
a. (வில.) காலடி உடைய, பாதம் போன்ற, (தாவ.) இலை வகையில் கால்விரல் அல்லது பறவை உகிர் போன்ற கூறுடைய.
Peddle
v. சுற்றித் திரிந்து விற்பனை செய், சுற்றித்திரி, அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு, சில்லறையாகக் கொடு, சிறிது சிறிதாகக் கொடு.
Pedestal
n. நிலைமேடை, சிலை அடிப்பீடம், தூண் அடிக்கட்டை, கால்புழை மேசையின் ஆதாரக்கல், இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம், இயங்கியல் நிலையடுக்கு, அடிப்படை, ஆதாரம், (வினை.) பீடத்தின் மீதமை, பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
Pedestal fan
தளிகை விசிறி (பீடம்), நிலைமேடை மின்விசிறி
Pedestrian
n. கால் நடையர், நடப்பவர், நடைப்பயிற்சியாளர், (பெ.) கால்நடையாகச் செல்கிற, நடந்து செல்கிற, நடத்தலுக்குரிய, மந்தமான, உயிரூக்கமற்ற.
Pedestrianism
n. நடைப்பயிற்சி, நடந்து செல்லும் பழக்கம்.
Pedestrianize
v. நட, கால்நடை பயில்.
Pedicular
a. பேன் போன்ற, பேன் சார்ந்த.
Pediculate
a. காம்புடைய, துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த.
Pedicure
n. கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம், கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர்,(வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய்.
Pedigree
n. குடிவழி, மரபுக் கால்வழி அட்டவணை, வம்சாவளி, விலங்கின் மரபுக் கால்வழி, மரபுக் கால்வழியுடையது.
Pedigreed
a. குடிவழியுடைய.