English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Perforce
n. இன்றியமையாச் சிறப்பு, (வினையடை) இன்றியமையாமையை முன்னிட்டு, கட்டாயத்தால்.
Perform
v. இயற்று, செயற்படுத்து, செய்துமுடி, வினையாற்று, ஆற்று, புரி, நடத்து, கையாளு, பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து, கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று, நாடகம் நடி, பாடல்பாடு, சூழ்ச்சி இழை, செயற்பொறிகள் காட்டு, பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு.
Performable
a. செய்யப்படத்தக்க, நடைமுறையில் கூடியதான, சாத்தியமான.
Performance
n. செயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி.
Performer
n. செய்பவர், வினையாற்றுபவர், செயல்நிறை வேற்றுபவர், கடமை நிறைவேற்றுபவர், சட்டநடவடிக்கைநிறைவேற்றுபவர், வினைமுறையில் பங்கெடுப்பவர், விழா முறையில் பங்கெடுப்பவர், வித்தைக்காரர், செயற்காட்சியாளர்.
Perfume
-1 n. நறுமணம், எரியும் பொருளினின்று எழும் நன்மணம், இன்மணம், மணம்,நறுமணத்தைலம்.
Perfume
-2 v. நறுமணமூட்டு, நறுமவ்ம் தோய்வி, நன்மணம் நிரப்பு, இன்மணங்கல.
Perfumer
n. நறுமணப்பொருள்கள் செய்பவர், நறுமணப்பொருள் வணிகர்.
Perfumeries
நறுமணப்பொருள்கள்
Perfumery
n. விரை, விரைபொருட்கலை.
Perfunctory
a. கடமைக்காகச் செய்யப்படுகிற, மேலோட்டமான, அக்கறைமட்டுமேயுடைய, ஆழ்கவனமற்ற, மனந்தோயாத, மெய்ப்புக்கான.
Perfuse
v. நீர் முதலியன தௌத, தூவு, ஔத முதலியவற்றின் வகையில் மூடு, நன்கு பரவு, சூழ்ந்துபரவு, கவி, உட்கவிவுற்றுப்பரவு, நீரை உள்ததும்பவிடு, நீர்மேலீடாக அலம்பவிடு.
Pergameneous
a. பண்படுத்தப்பட்ட வரையுந்தோலாலான, எழுதுதற்காகப் பதபபடுத்தப்பட்ட ஆட்டுத்ல் போன்ற.
Pergola
n. கொடிவீடு, தோட்டப் பூம்பந்தர், செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை, கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
Pergunnah
n. ஊர்களை உள்ளடக்கிய ஊர் வட்டகை, பிடாகை.
Peri
n. பாரசீகப் பழங்கதை மரபில் தேவதை, அணங்கு, அழகி.
Perianth
n. பூவின் புறவட்டம், அல்லி வட்டமும் புல்லிவட்டமும் வேறு பிரிக்கப்பட முடியாத நிலையிலுள்ள முழுவட்டம்.
Periapt
n. தாயத்து, மந்திரக்கவசம்.
Pericarditis
n. குலையுறை அழற்சி, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.