English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Peripatetic
-1 n. (பே-வ) சாத்து வணிகர், (பெ.) செயற்காரணமாக அல்லது தொழிற் காரணமாக இங்குமங்கும் அலைந்து திரிகிற, திரிந்து வாணிகஞ் செய்கிற.
Peripatetic
-2 n. பண்டைக்கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலைச் சார்ந்த, அரிஸ்டாட்டிலைப் பின்பற்றுகிற.
Peripeteia, peripetia
வாழ்க்கையில் திடீர்ச்செல்வநிலைமாறுதல், நாடகத்தில் திடீர்ச் செல்வநிலை மாற்றம்.
Periphery
n. வட்டப்பரப்பின் சுற்றுக்கோடு, புற எல்லை, புறப்பரப்பு.
Periphrasis
n. சுற்றி வளைத்துப் பேசுதல், மிகைபடக் கூறல், சுற்றி வளைத்த சொற்றொடர்.
Peripteral
a. கோயில் வகையில் ஒற்றை வரிசைத் தூண்களாற் சூழப்பட்ட.
Perique
n. மிகச்சிறந்த கருநிறப் புகையிலை வகை.
Periscope
n. நீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி, நிழற்படக் கருவியின் மையச்சில்லு.
Periscopic
a. காட்சி நேர்வரை திறம்பியைக் காண உதவுகிற.
Perish
v. அழி, இறந்துபோ, மறைவுறு, உயிரிழ, மாள்வுறு, அழிவுக்கு ஆளாகு, வீழ்ச்சியுறு, ஆற்றலிழக்கச் செய்.,
Perishable
a. அழிந்துபோகிற, விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற.
Perishables
n.pl. அழிபொருள்கள், காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை.
Perisperm
n. விதைகள் சிலவற்றில் முளைப்பையின் புறத்தேயுள்ள வெண் கருத்திரள்.
Perispome, perispomenon
n. (இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல்.
Perissodactylate
a. (வில.) ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட.
Peristalith
n. (தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம்.
Peristalsis
n. (உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
Peristeronic
a. மாடப்புறாக்களுக்கு உரிய.
Peristome
n. (தாவ.) பாசிகளில் விதையுறைகளின் வாயிலுள்ள பல்லமைவு, (வில.) முதுகெலும்பு விலங்குகளின் வாயைச் சுற்றுயுள்ள பகுதி.
Peristyle
n. கற்றுத்தூண் வரிசை, கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை, சுற்றுமண்டபம், கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம்.