English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Roulade
n. இன்னிசைநயம், உருட்டு வண்ண வகை.
Rouleau
n. சுருள், திருகுமடி, பொன் நாணய அடுக்கு,
Roulette
n. சுழல்மைய மேசைக் கவறாட்டமம், புரிகுழற் கருவி, மயிர்த் திருக்கு, அஞ்சல் வில்லைப் புள்ளிவரிக் கருவி, செதுக்கு வேலைக்குரிய சுழல் பல்வட்டுக்கருவி, (கண) திரிவட்டணை, சுழல்வட்டப் புள்ளியின் திரிவளைவு.
Rouman, Roumanian
ருமேனிய நாட்டவர், ருமேனிய நாட்டுமொழி, நாட்டுமொழி, (பெயரடை) ருமேனிய நாட்டைச் சார்ந்த, ருமேனிய நாட்டு மொழியைச் சார்ந்த.
Roumeliote
n. ருமேலியா நாட்டவர்.
Rouncival
n. பெரும் பட்டாணி வகை.
Round
-1 n. உரண்டை, உருள்வடிவப் பொருள், திரளை, உருள் பகுதி, உருளைக்கூறு, அப்பவட்டுக்கூறு, மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு, வட்டம், வளையம், சுற்றுவரை, வட்டகை, சுற்றுப்பரப்பு, சுற்றெல்லை, வளைவு, திருகுசுருள், ஏணிப்படி, வடிப்பாலைக் கொதிகலம், மூலைமணிக்கூண்டு, சுழற
Roundabout
n. சுற்று வளைப்பு வழி, வட்டச்சுற்று வழிங போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம், சுற்றுவளைப்புப்பேச்சு, குடை இராட்டினம், வட்ட மண் அரண், வட்டாகார நடனம், (பெயரடை) சுற்று வழியான, சுற்றுமுகமான, மறைமுகமான, சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற, மொட்டைக் கட்டையான, வாலோ பின் தொங்கலோ இல்லாத, கொழுத்த, பருமனான, (வினை) இராட்டினமாகச் சுழல், சுற்றிச்சுற்றிவா.
Round-arm
a. கைவகையில் ஏறத்தாழக் கிடிடைநிலையாக வீறூம் இயல்புடைய.
Roundel
n. சிறுவட்டு, ஒப்பனை வாய்ந்த விருவப் பதக்கம், 10அல்லது 13 வாயுள்ள இசைப்பாட்டு வகை.
Roundelay
n. அடுக்கிசையுடைய எளிய சிறு பாடல்வகை, பறவைப்பாடல்.
Rounder
n. சுற்றுபவர், திரிபவர், சுற்றுலாவாணர், மெதடிஸ்டு சமயக்கிளையின் பிரசார உலாவாணர், செய் பொருள்களுக்கு உருள்வளைவான உருக்கொடூப்பவர், புத்தக மூட்டமைப்பவர், செருப்பு அடித்தோல் வகுப்பவர், வட்டக்குல்லாய் அமைப்பவர், வட்டவடிவாக்குங் கருவி, ஆவர்த்தி. அலைவட்டம், வட்டப்பந்தாட்டத்தில் கெலிப்பு வட்டம்.
Rounders n. pl.
வட்டப்பந்தாட்டம், வட்டமாக அமைக்கப்பட்ட தளமுழுவதுஞ் சென்று ஒவ்வொரு ஆட்டக்காரரும் கெலிப்பதைக் கெலிப்பெண்ணாகக்கொண்ட பந்தாட்ட வகை.
Roundhand
n. செவ்வுருள் எழுத்துமுறை, ஒவ்வோர் எழுத்தும் உருண்டையாகவும் அகலமாகவும் எழுதப்படும் கையெழுத்துப்பாணி.
Roundhead
n. வட்டத்தலையர், (வர) பிரிட்டனிடில் 1ஹ்-ஆம் நுற்றாண்டைய உள்நாட்டுப் போரின் போது இங்கிலாந்து மாமன்றக் கட்சி உறுப்பினர்.
Round-house
n. (வர) காவல் வீடு, சிறைச்சாலை (கப்) கப்பல் மேல்தளப் பின்புறமுள்ள அறை.
Roundish
a. சற்றே வட்டமான, சிறிது உருண்டையான.
Roundly
adv. முழுக்க முழுக்க, செம்மையாக, வௌதப்படையாக, பேச்சில் கபடமின்றி, வரையறையின்றி, கண்டிப்பாக, வட்டமாக, முழுவட்டத்தொகையாக.
Rounds
n. pl. (படை) சுற்றுக்காவல் மேற்பார்வை, காவல் வீரர்களைப் பார்வையிடுவதற்காகச் சுற்றி வருதல்.
Round-shouldered
a. முதுகுப்பக்கமாகக் கவிந்த தோள்களையுடைய.