English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rove
-3 n. இறுக்குவட்டு, ஆணியை ஊடே செருகி இறுக்கப்படுகிற சிறு உலோகத் தகடு அல்லது வளையம்.
Rover
-1 n. அலைந்து திரிபவர், அம்பெறிவதற்கான குறியிலக்கு, தொலைவு இலக்குக்குறி, புல்வௌத மரப்பந்தாட்ட வகையில் ஒரு முளை தவிர மற்றவற்றை அடித்து வீழ்த்திய பந்து, மரமுளையை அடித்து ஆட்டத்தை முடிக்கவிருக்கும் ஆட்டக்காரர், கடற்கொள்ளைக்காரன், முதிர்நிலைச் சாரணச் சிறுவன்.
Rover
-2 n. முதிரா இழைப்பொறி, பஞ்சு-கம்பளம் முதலிய வற்றின் சிம்புகளை இழுத்துச் சற்றே முறுக்குவதற்கான கருவி, முதிரா இழைப்பொறியைக் கவனித்துக்கொள்பவர்.
Row
-1 n. வரிசை, நாடக அரங்குகளில் இருக்கைநிலை, தோட்டச் செடிப் பந்தி.
Row
-2 n. தண்டு உகைப்பு, படகில் மகிழ்வுலா, (வினை) தண்டு உகை, படகு செலுத்து, படகில் ஏற்றிக்கொண்டு போ, படகுப் போட்டியிடியில் ஈடுபடு, போடடிப்பந்தயத்தில் பட கோட்டியாயிரு, படகுவகையில் உகை துடுப்புகள் கொண்டதாயிரு.
Row
-3 n. (பே-வ) குழப்பம், கலசல், பூசல், வாதம், கலக்கம், கொந்தளிப்பு, அரவம், கலகம், சந்தடி, தாராளமான கைகலப்பு, கண்டிக்கப்பெறுதல், (வினை) அதட்டு, குற்றங்கூறு கண்டனஞ் செய், அதிட்டு.
Rowan
n. இறகுபோன்ற இலைகளையும் சிவப்புப் பழங்களையுமுடைய மரவகை, செந்நிறப் பேரிப்பழவகை.
Row-boat
n. துடுப்புப்படகு.
Row-de-dow
n. போரொலி, சந்தடி, அமளி.
Rowdiness
n. போக்கிரித்தனம், முரட்டுக்குணம்.
Rowdy
n. போக்கிரி, முரடன், பெருங்கூச்சலிடுபவன், (பெயரடை) போக்கிரித்தனமான, முரட்டுக்குணம் வாய்ந்த, பெருங்கூச்சலிடுகிற.
Rowdy-dowdy
a. அமளி செய்கிற, பெருங்கூச்சலிடுகிற.
Rowdyish
a. வீண் கலகஞ் செய்கிற.
Rowdyism
n. போக்கிரித்தனமான நடத்தை.
Rowel
n. தாற்றுச்சில்லு, குதி முள்ளின் முனையிலுள்ள பற்களமைந்த சுழலுஞ் சிறுவட்டு, நீரதுக்கு வட்டு, குதிரையின் உல்ம்பிலுள்ள நீர்க் கூற்றினை வௌதப்படுத்துவதற்குத் தோலுக்கும் தசைக்கும் இடையே செருகப்படும் மையத் துளையுடைய வட்டத் தோல் துண்டு, (வினை) தாற்றுச்சில்லினால் கிளறித்தூண்டு, குதிரை உடலில் நீரதுக்கு வட்டுச் செருகு.
Rowlock
n. உகைமிண்டு, படகுத் துடுப்புக்கு உகைப்பாதாரமான அமைவு.
Roxburghe
n. புத்தகக் கட்டடப் பாணிவகை, பொன் எழுத்துடைய மூட்டுத்தோலும் வெட்டா அருகும் உடைய புத்தகக் கட்டடமுறை.
Royal
n. (பே-வ) அரச குடும்பத்தினர், இரலை, அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான், முகட்டுக்கூம்பு, உச்சிப் பாய்மரம், முகட்டுப்பாய், பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய், (பெயரடை) அரசனுக்குரிய, அரசிக்குரிய, அரசுரிமை சார்ந்த, அரசு வழிவந்த, அரச குடும்பத்தைச் சேர்ந்த, அரசுப் பணியிலிருக்கிற, அரசர் ஆதரவு பெற்றுள்ள, அரசு முறையான, வீறார்ந்த, மாண்புடைய, பகட்டாரவாரமான, சிறந்த, உயர்ந்த, முதல்வதரமான, பேரளவினதான, இயல்வுமீறய அளவினமான.
Royalism
n. முடியரசுக் கோட்பாட்டுப் பற்று.